விளையாட்டு

தோனியிடம் சிஎஸ்கே ஜெர்சி வாங்கிய துரைமுருகன்!

webteam

ஐபிஎல் தொடரில் சாம்பியன் ‌பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பதினோறாவது ஐபிஎல் திருவிழாவில், கோப்பையை கைப்பற்றியிருக்கிறது, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்!  வெற்றி பெற்ற சிஎஸ்கே அணிக்கு 20 கோடி ரூபாயும் இரண்டாவது இடம் பெற்ற ஐதராபாத் அணிக்கு 12.5 கோடி ரூபாயும் பரிசுத் தொகை வழங்கப் பட்டது.

பரிசுத் தொகையுடன் சென்னை திரும்பிய சிஎஸ்கே வீரர்களுக்கு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று ஸ்பெஷல் விருந்து கொடுக்கப் பட்டது. அப்போது அணி நிர்வாகத்துக்கு வேண்டிய முக்கியஸ்தர்களை சந்திக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகனும் கலந்துகொண்டு, தோனியை வாழ்த்தினார். அப்போது தனது கையெழுத்துடன் கூடிய சிஎஸ்கே டிசர்ட்டை துரைமுருகனுக்கு தோனி பரிசளித்தார்.