விளையாட்டு

ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு ஆபத்து?... பேட்டை மாற்றும் கட்டாயத்தில் தோனி

ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு ஆபத்து?... பேட்டை மாற்றும் கட்டாயத்தில் தோனி

webteam

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பயன்படுத்தும் பேட் குறித்த எம்சிசி குழுவின் நடைமுறைகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலாக இருக்கிறது. 

இந்த புதிய விதிமுறைகளின்படி, வீரர்களின் பேட் முனையில் உள்ள எட்ஜ் எனப்படும் அடிப்பகுதி 40 மி.மீக்கும் அதிகமாக இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 மி.மீ. எட்ஜ் பகுதி கொண்ட பேட்டை தோனி, தற்போது பயன்படுத்தி வருகிறார். இதனால், அந்த பகுதியைக் குறைக்க வேண்டிய கட்டாயம் தோனிக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் போலார்ட் மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோருக்கும் பேட் அளவை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஏபி டிவிலியர்ஸ் ஆகியோர் புதிய விதிமுறைகளுக்குட்பட்ட பேட்டுகளையே தற்போதும் பயன்படுத்தி வருகின்றனர்.