விளையாட்டு

“போங்க என் அப்பா மாதிரி ஓட்டு போடுங்க” - தோனி மகளின் ஸ்வீட் டாக்..!

“போங்க என் அப்பா மாதிரி ஓட்டு போடுங்க” - தோனி மகளின் ஸ்வீட் டாக்..!

webteam

தன் அப்பாவை போன்று அனைவரும் வாக்களியுங்கள் என தோனி மகள் கூறும் வீடியோ இண்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.

சென்னை ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியா மற்றும் உலக அளவில் அதிக கிரிக்கெட் ரசிகர்களை கொண்டவராக தோனி திகழ்கிறார். சாதாரண கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக அணியில் சேர்ந்த தோனி இந்த இடத்தை அடைந்திருக்கிறார் என்றால், அதற்குப் பின்னர் கடின உழைப்பு ஒன்று மட்டும்தான் இருக்கிறது. 37 வயதாகும் தோனியின் உடற்கட்டே அதற்கு சாட்சி. சர்வதேச போட்டிகளில் ஆரம்பக் காலத்தில் தோனியின் மீது கவனத்தை திருப்பிய விஷயங்களில் ஒன்றாக இருந்தது அவரது வேகமான ஓட்டம். இளமை காலத்தில் அனைவரும் இப்படித்தான் வேகமாக ஓடுவார்கள் என்ற விமர்சனங்கள் அப்போது முன்வைக்கப்பட்டன.


 
ஆனால் 2004ஆம் தொடங்கிய அவரது ஓட்டம் 15 ஆண்டுகளாகியும் இன்றும் ஓயவில்லை. இந்தியாவின் தற்போதைய வீரர்கள் இளம் வீரராகவும், உடற்கட்டுத் தகுதியில் அனைவரையும் அசரடிக்கும் அளவிற்கு இருக்கு ஹர்திக் பாண்ட்யாவே அண்மையில் தோனியுடன் போட்டி போட்டு ஓடித் தோற்றுப்போனார். அந்த அளவிற்கு தோனி ஓட்டத்தில் இன்னும் வேகம் குறையவில்லை. அதற்கு காரணம் அவரது கடின உழைப்பும், அயராத பயிற்சியும்தான்.

ஆனால் கடந்த பல மாதங்களாக தோனிக்கு இன்னொரு முக்கிய சக்தியாக இருப்பது அவரது மகள் ஜிவா. தோனியின் ரசிகர்கள் அனைவருமே அவரது மகளுக்கும் ரசிகர்களாகிவிட்டனர். அவரது மகளும் அவரும் சேர்ந்து பலமுறை மைதனாங்களில் வலம் வரும் காட்சிகளும், சேர்ந்து செய்யும் சேட்டைகளும் வீடியோவாக வைரல் ஆகியுள்ளது.  தோனி இத்தனை அளவு பிசியாக இருந்த போதிலும் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில் அவர் பொறுப்புடனே செயல்பட்டு வந்துள்ளார்.

அந்த வகையில் தோனியின் ஜனநாயகக் கடைமையை வெளிப்படுத்தும் வகையில் தற்போது ஜிவா ஒரு டயலாக் பேசியுள்ளார். அதில் ஜிவா, “போங்க என் அப்பாவை போன்று வாக்களியுங்கள்” எனக் குழந்தை தனத்துடன் கூறுவது மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது. அவருடன் தோனியும் இருக்கிறார். இந்த வீடியோவை தோனி அவரது இண்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நாளை மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்குள் நுழையும் முதல் தகுதிச் சுற்று நடைபெறுகிறது. இந்த சூழலிலும் தோனி தனது ஜனநாயகக் கடைமையை ஆற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.