உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு கள நடுவர்களாக, குமார் தர்மசேனா, எரஸ்மஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன் னேறின. முதலாவது அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கி லாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.
இந்தப் போட்டிக்கு நடுவராகச் செயல்படுவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நியமித்துள்ளது. இங்கிலாந்து- ஆஸ்திரே லியா போட்டியின்போது நடுவர்களாக செயல்பட்ட இலங்கையின் குமார் தர்மசேனா, தென்னாப்பிரிக்காவின் எரஸ்மஸ் ஆகியோர் கள நடுவர்களாக செயல்படுவார்கள். போட்டியின் மூன்றாவது நடுவராக ஆஸ்திரேலியாவின் ராட் டக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா மோதிய அரையிறுதிப் போட்டியில் ஜேசன் ராய்க்கு தவறான அவுட் கொடுத்து குமார் தர்ம சேனா சர்ச்சையில் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.