விளையாட்டு

டெல்லி டேர்டெவில்ஸ் பெயர் மாற்றம் ஏன்?

டெல்லி டேர்டெவில்ஸ் பெயர் மாற்றம் ஏன்?

webteam

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பெயர், டெல்லி கேப்பிடல்ஸ் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இடம்பெறும் அணிகளில் ஒன்று, டெல்லி டேர்டெவில்ஸ். இதுவரை நடந்துள்ள 11 தொடர்களிலும் இறுதிப்போட்டிக்கு செல்லாத ஒரே அணி இதுதான்.  கடந்த 6 சீசன்களில் லீக் சுற்றைக் கூட தாண்டவில்லை. கேப்டன்களை மாற்றியும் அந்த அணியால் வெல்ல முடியவில்லை. இந்நிலையில் அந்த அணியின் பெயரை டெல்லி கேப்பிடல்ஸ் என்று மாற்றியுள்ளது. டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அணியின் புதிய சீருடையும் அறிமுகம் செய்யப்பட்டது. சன்ரைசர்ஸ் அணியில் இருந்த ஷிகர் தவான் வரும் ஐபிஎல்-லில் டெல்லி அணிக்கு தலைமை ஏற்கிறார்.

பெயர் மாற்றம் ஏன் என்பது பற்றி அந்த அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் கூறும்போது, ‘இந்தியாவின் தலைநகராக டெல்லி திகிழ்கிறது. டெல்லியில் உள்ள ஒவ்வொருவரையும் குறிக்கும் விதமாக அணியின் பெயர் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதனால் எங்கள் அணியின் பெயரில் கேப்பிடல் என சேர்த்துள்ளோம். நமது தேசிய விலங்கு புலி. அதனால், மூன்று புலிகளை கொண்டு புதிய லோகோவை உருவாக்கி இருக்கிறோம்’ என்றார்.

அணியில் இருந்து கிளன் மேக்ஸ்வெல், ஜேசன் ராய், கவுதம் காம்பீர் உட்பட 10 வீரர்களை டெல்லி அணி நீக்கியுள்ளது. இந்த வருட ஏலத்தில் புதிய வீரர்கள் எடுக்கப்பட இருக்கின்றனர். ஸ்ரேயாஸ் ஐயர், பிருத்வி ஷா, ரிஷாப் பன்ட் ஆகிய இளம் வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.