அபுதாபியில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீஸனின் 42வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட் செய்த கொல்கத்தா இருபது ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை எடுத்தது.
கில், ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் மாதிரியான பேட்ஸ்மேன்கள் ஏமாற்றிய நிலையில் நித்திஷ் ராணாவும், சுனில் நரைனும் அற்புதமாக பேட் செய்தனர்.
இருவரும் 115 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
நரைன் 32 பந்துகளில் 64 ரன்களை குவித்தார்.
நித்திஷ் ராணா 53 பந்துகளில் 81 ரன்களை குவித்து அசத்தினார்.
டெல்லி அணிக்காக ரபாடாவும், நார்ட்ஜெவும், ஸ்டானிஸும் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து களம் இறங்கிய டெல்லி அணியின் ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. ரஹானேவும், தவானும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
டெல்லி அணியின் இன்னிங்க்ஸை ஸ்டெடி செய்த பண்ட், ஷ்ரேயஸ் ஐயர் விக்கெட்டை காலி செய்தார் வருண்.
அதோடு ஹெட்மேயர், ஸ்டாய்னிஸ் மற்றும் அக்சர் பட்டேல் விக்கெட்டுகளையும் வருண் போனஸாக வீழ்த்தி கொடுத்தார்.
இருபது ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை டெல்லி எடுத்தது.
இதன் மூலம் கொல்கத்தா 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தாவிற்கு மேட்ச் வின்னராக வருணும், நித்திஷ் ராணாவும் ஜொலித்தனர்.