தனக்கும் விராட் கோலிக்கும் இடையே உள்ள ஒற்றுமையை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வானர் ஒரு பேட்டியில் விளக்கியுள்ளார்.
கிரிக்கெட் உலகை பொறுத்தவரை தனித்தனி ரகம் கொண்ட பல்வேறு வீரர்கள் இருப்பார்கள். இந்திய அணியின் கேப்டன்களை எடுத்துக் கொண்டால், சவுரவ் கங்குலி ஆக்ரோஷமானவர் என்றால், தோனியில் கூல் கேப்டன் என பெயர் எடுத்தவர். அந்த வகையில், விராட் கோலி மிகவும் தனித்துவமான ஆக்ரோஷமான குணம் கொண்டவர். அவரது இந்த ஆக்ரோஷமான இந்த குணத்தை களத்தில் நாம் அடிக்கடி பார்க்க முடியும். அதுவும் களத்தில் எதிர் அணியின் வீரர்களோ, மைதானத்தில் உள்ள ரசிகர்களோ சீண்டிவிட்டால் போது, வீறு கொண்டு எழுந்தார் போல் அவரது ஆட்டத்தில் சூடுபிடிக்கும். அப்படி எதிரணியின் சீண்டல்களால் விராட் கோலி குவித்த ரன்கள் ஏராளம்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் உள்ள குணம்தான் தன்னிடமும் உள்ளது ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார். வார்னரும் மிகவும் ஆக்ரோஷமான வீரர். இவரும் மைதானங்களில் பலமுறை சீண்டலுக்கு ஆட்பட்டு, அதற்கான பதிலடியை தன்னுடைய பேட்டிங்கில் காட்டியுள்ளார். தனக்கும், விராட் கோலிக்கும் இடையிலான இந்த ஒற்றுமை குறித்து, வீரர்களை சீண்டுவது குறித்தும் வார்னர் பேசியுள்ளார்.
கொரோனா பரவலை அடுத்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே முடங்கிப் போய் கிடக்கிறது. ஐபிஎல் போட்டிகள் உட்பட அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மும்முரமாக பொழுதைக் கழித்து வருகின்றனர். மேலும் இன்ஸ்டா பக்கத்தின் நேரலையில் சக வீரர்களுடன் உரையாடி வருகின்றனர்.
இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு டேவிட் வார்னர் அளித்த பேட்டியில், இதுபோன்ற கூட்டத்தின் மத்தியில் தான் வளர்ந்தேன். அதில், "நான் கூட்டத்தில் தான் வளர்கிறேன், களத்தில் விளையாடும் போது மற்றவர்கள் என்னை சீண்டும் விதத்தாலும் வளர்கிறேன். இதுபோன்ற தன்மை விராட் கோலியிடமும் நீங்கள் பார்க்க முடியும். இப்படியான பல கடினமான பாதைகளை அவர் கடந்து வந்துள்ளார். அவர் ஆச்சர்யப்படும் அளவிற்கு விளையாடுகிறார். அதனை நாம் மீண்டும், மீண்டும் பார்த்து வருகிறோம்”என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், கரடியை உங்களால் சீண்ட முடியாது, அப்படி செய்தால் கடைசியில் நீங்கள் தான் தாக்குதலுக்கு ஆளாவீர்கள் என்று வார்னர் காட்டமாக பேசியுள்ளார். மேலும், ஆஸ்திரேலிய வீரர்கள் விராட் கோலியை சீண்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வார்னர் வலியுறுத்தியுள்ளார்.