விளையாட்டு

‘எனக்கு உதவி வேண்டும்’- டிக்டாக்கில் குழந்தைகளுடன் குத்தாட்டம் போட்ட வார்னர் 

‘எனக்கு உதவி வேண்டும்’- டிக்டாக்கில் குழந்தைகளுடன் குத்தாட்டம் போட்ட வார்னர் 

webteam
டிக்டாக் பற்றி தனக்குத் தெரியாது ஆகவே உதவித் தேவை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
டேவிட் வார்னர்! ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர். கிரிக்கெட் ஆட்டத்தைப் போலவே சமூக வலைத்தளத்திலும் வார்னர் தீவிரமாக இயங்கி வருகிறார். இப்போது உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பரவி வருவதால் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.  ஆகவே வார்னர் நெட்டிசன்களை மகிழ்விப்பதற்காக விதவிதமான சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 
 
 
 
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் டிக்டாக்கில் செய்த வீடியோ ஒன்றைச் சமீபத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவரது இரண்டு மகள்களும் சேர்ந்து ஆட்டம் போடுகிறார்கள். அந்த வீடியோவில் மழை வருவதைப் போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில் இந்தக் குட்டீஸ்கள் அப்பாவுடன் இணைந்து ஆட்டம் போடுகிறார்கள். அந்த வீடியோ இப்போது வைரலாக மாறியுள்ளது.
 
அவரது இந்தப் பதிவில், “சரி, என்ன நடக்கிறது என்பது பற்றி ஒரு ஐடியாவும் இல்லை. ஆனால் எனது 5 வயது குழந்தை டேவிட் புல்வார்னர்  ஒரு டிக் டோக் செய்யச் சொன்னார். அதில் என்னைப் பின்தொடர்பவர்களே இல்லை. எனக்கு கொஞ்சம் உதவி தேவை. அவர்கள் சாண்டியை விரும்புகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
 
மேலும் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராமில் ஒரு பழைய வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், வார்னர் தனது ஐபிஎல் அணியான சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்காகச் செய்த ஒரு விளம்பர காட்சி பதிவாகியுள்ளது. அதில் கிரிக்கெட் பேட்டை வைத்து வாள் வீசுவதைப்போல் அவர் நடித்துக் காட்டுகிறார் அந்தப் பதிவில் வார்னர், ஜடேஜாவுடன் ஒப்பிட்டு தன்னுடைய திறமை குறித்து ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.