விளையாட்டு

கோப்பையை வென்றது மும்பை : வாட்சன் போராட்டம் வீண்

கோப்பையை வென்றது மும்பை : வாட்சன் போராட்டம் வீண்

webteam

சென்னைக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்று சென்னை கோப்பையை கைப்பற்றியது.

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரரான டி காக் ஆரம்பம் முதலே சிக்ஸர் மழை பொழிந்தார். மற்றொரு புறம் ரோகித் ஷர்மா பொறுப்புடன் ஆடினார். டி காக் 29 (17) ரன்கள் எடுத்திருந்த போது தகூர் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

அதைத்தொடர்ந்து சாஹர் வீசிய பந்தில் ரோகித் ஷர்மா 15 (14) ரன்களில் வெளியேறினார். அதைத்தொடர்ந்து, சூர்யகுமார் 15 (17),
இஷான் கிஷண் 23 (26), ஹர்திக் பாண்ட்யா 16 (10) ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதிவரை ஆடிய பொலார்ட் 41 (25) ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 149 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் பொலார்ட் 41 (25) ரன்கள் எடுத்தார். சென்னை அணியில் சாஹர் 3 விக்கெட்டுகளும், தகூர் மற்றும் தஹிர் தலா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர். 

இந்நிலையில் இரண்டாவது பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணியில் டு பிளசிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 (13)
ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த ரெய்னா 8 (14) ரன்களில் வெளியேறினார். அவர் ஒரு ரிவிவ் ஆப்ஷனையும்
வீணாக்கிவிட்டுச் சென்றார். பின்னர் வந்த அம்பத்தி ராயுடு 1 (4) மட்டும் எடுத்து சொதப்பிவிட்டுச் சென்றார். இந்த இக்கட்டான
தருணத்தில் தோனி 2 (8) ரன்களில் ரன் அவுட் ஆகி சென்றார்.

ஒரு கட்டத்தில் 30 பந்துகளுக்கு 62 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. அப்போது பந்துவீசிய மலிங்கா ரன்களை வாரிக்கொடுத்தார். அந்த ஒரு ஓவரில் மட்டும் 20 ரன்களை சென்னை அணி எடுத்தது. இதனால் இலக்கு சற்று எளிதாகியது. பின்னர் வந்த பும்ரா 4 ரன்கள் மட்டுமே கொடுத்து மீண்டும் சென்னையை நெருக்கடிக்கு தள்ளினார். குருனல் பாண்ட்யா வீசிய அடுத்த ஓவரில் வாட்சன் வான வேடிக்கை காட்டி ரசிகர்களை கொண்டாடச் செய்தார். இந்த ஓவரிலும் மட்டும் சென்னை 20 ரன்களை எடுத்தது. வாட்சன் தொடர்ந்து 3 சிக்ஸர்கள் அடித்தார்.

இதனால் 12 பந்துகளுக்கு 18 ரன்கள் என்ற நிலை வந்தது.  அடுத்த ஓவரில் பும்ரா வீசிய பந்தில் 15 (15) ரன்களில் பிரவோ வெளியேறினார். கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. 19.4வது பந்தில் வாட்சன் 80 (59) ரன்களில் ரன் அவுட் ஆனார். சென்னை ரசிகர்கள் தலையில் கை வைத்தனர். பின்னர் 2 பந்துகளுக்கு 4 ரன்கள் வெற்றி என்றானது. அடுத்த பந்தில் 2 ரன்களை தகூர் அடிக்க, ஒரு பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த பந்தில் மலிங்கா விக்கெட்டை வீழ்த்தியதால், மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.