துபாய் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் விளையாடின.
முதலில் பேட் செய்த கொல்கத்தா இருபது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது.
அந்த இலக்கை சென்னை விரட்டியது.
வாட்சனும், கெய்க்வாடும் சென்னைக்காக இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர்.
இருவரும் 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் வாட்சன் 14 ரன்களில் வருண் சக்கரவர்த்தியின் சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்தார்.
அதனையடுத்து ராயுடு கிரீசுக்கு வந்தார்.
கடந்த ஆட்டத்தை போலவே ராயுடுவும், கெய்க்வாடும் இணைந்து 68 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
20 பந்துகளில் 38 ரன்களை எடுத்த நிலையில் ராயுடு கம்மின்ஸ் பந்தில் வெளியேறினார்.
கேப்டன் தோனி மீண்டும் வருண் சுழலில் க்ளீன் போல்டாகி வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.
72 ரன்களை எடுத்த நிலையில் கெய்க்வாட் கம்மின்ஸின் வேகத்தில் போல்டானார்.
16 பந்துகளில் 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜாவும், சாம் கர்ரனும் இணைந்தனர்.
அதில் ஜடேஜா அதிரடியாக விளையாடினார். 11 பந்துகளில் 31 ரன்களை சேர்த்தார்.
இருபது ஓவர் முடிவில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வென்றது.