துபாய் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் நடப்பு ஐபிஎல் சீசனின் 49வது லீக் ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார். இதனையடுத்து கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. சுப்மன் கில்லும், நிதிஷ் ராணாவும் அந்த அணிக்காக இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர்.
இருவரும் பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டை இழக்காமல் ஆறு ஓவர் முடிவில் 48 ரன்களை சேர்த்தனர். ஏழு ஓவர்கள் முடிந்த நிலையில் டைம் அவுட் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து எட்டாவது ஓவரை கரன் ஷர்மா வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை கில் மிஸ் செய்ய அது லெக் ஸ்டெம்ப்பை பதம் பார்த்தது. கில் 26 ரன்களுக்கு ஆட்டம் இழக்க தொடர்ந்து களம் இறங்கிய சுனில் நரைன் மற்றும் ரிங்கு சிங்கும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
மறுபக்கம் நிலைத்து நின்று விளையாடிய ராணா 61 பந்துகளில் 87 ரன்களை குவித்தார். அதில் 4 சிக்ஸர்களும், 10 பவுண்டரிகளும் அடங்கும்.
கரன் ஷர்மா வீசிய 16வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை ராணா பறக்கவிட்டிருந்தார். தினேஷ் கார்த்திக் தன் பங்கிற்கு 10 பந்துகளில் 21 ரன்களை விளாசியிருந்தார்.
இருபது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது கொல்கத்தா.
தொடர்ந்து சென்னை அணி இலக்கை விரட்டி வருகிறது.