ஐபிஎல் தொடர் ஆரம்பமான கடந்த 2008 முதலே ஆதிக்கம் செலுத்தி வரும் அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ்.
தோனியின் தலைமையின் கீழ் ஐபிஎல் களத்தில் சிங்க நடை போட்டு வருகிறது சி.எஸ்.கே. இருப்பினும் இந்த சீஸனில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிகளவிலான ரன்களை லீக் செய்து வருகின்றனர் சி.எஸ்.கே பவுலர்கள்.
ஒட்டுமொத்த பவுலிங் யூனிட்டும் டோட்டலாக சொதப்பி வருகிறது. சாம் குரான், ஹசல்வுட் மட்டும் இன்று ஓரளவு ரன்களை குறைவாக வழங்கினர்.
ஐந்து பவுலர் ஆப்ஷனோடு சி.எஸ்.கே விளையாடுவதே இதற்கு காரணம் என் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹேசில்வுட், தீபக் சஹார், சாம் கர்ரன் வேகப்பந்து வீச்சாளர்களாக செயல்பட ஜடேஜா மற்றும் பியூஷ் சாவ்லா சுழற் பந்து வீச்சை கவனித்து கொள்கின்றனர்.
ராஜஸ்தான் மற்றும் டெல்லி உடனான போட்டியில் மட்டும் 172 ரன்களை சென்னையின் ஸ்பின் இணையர்கள் கொடுத்துள்ளனர். மெயின் ஸ்பின்னர்கள் உதைவாங்கும் போது மூன்றாவது ஸ்பின் ஆப்ஷனாக கேப்டன் தோனி கேதார் ஜாதவை ஏன் பயன்படுத்தக் கூடாது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இன்றையப் போட்டியில் ஜடேஜா 4 ஓவர்கள் வீசி 44 ரன்கள் வாரி வழங்கினார். அதேபோல், தீபக் சாஹர் ஓவரிலும் 38 ரன்கள் குவித்தனர் டெல்லி பேட்ஸ்மேன்கள்.
மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் ரன்களை பவுலர்கள் அதிகமாக லீக் செய்யும் போது ஆறாவது பவுலர்களை பரிசோதனை முயற்சியாக பந்து வீச செய்து ரன்களை கட்டுப்படுத்த முயன்றுள்ளன.
குறிப்பாக இந்த சீஸனில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பலமான பவுலிங் யூனிட்டை கொண்ட மும்பை அணியே பொல்லார்டை ஆறாவது பவுலராக இறக்கி ரன்களை கட்டுப்படுத்தியுள்ளது.