விளையாட்டு

தோனியின் விருப்பப்படி சுரேஷ் ரெய்னாவை தக்க வைக்கப்படுகிறார் - சிஎஸ்கே நிர்வாகி தகவல்!

தோனியின் விருப்பப்படி சுரேஷ் ரெய்னாவை தக்க வைக்கப்படுகிறார் - சிஎஸ்கே நிர்வாகி தகவல்!

jagadeesh

2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியிலிருந்து சுரேஷ் ரெய்னா விடுவிக்கப்படுவார் என்ற செய்தி வெளியான நிலையில் தோனியின் விருப்பத்தின் காரணமாக அவர் விடுவிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஐபிஎல் அணிகளுக்கு வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான மினி ஏலத்தை பிப்ரவரி 11-ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருக்கும் 8 அணிகளும் சில வீரர்களை வெளியேற்றி புதிய வீரர்களை வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதில் ஐபிஎல் வரலாற்றில் கடந்தாண்டு மோசமாக விளையாடிய சில வீரர்கள் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற்றப்படலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.

இதில் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை இதில் முரளி விஜய், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், ஜோஷ் ஹேசல்வுட், கரண் சர்மா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இப்போது முரளி விஜய், பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங் ஆகியோர் விடுவிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. ஷேன் வாட்சன் ஏற்கெனவே தன்னுடைய ஓய்வை அறிவித்துவிட்டதால் இந்தாண்டு ஐபிஎல்லில் அவர் பங்கேற்கமாட்டார்.

இந்நிலையில் "சின்ன தல" என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா மற்றும் கடந்தாண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேதர் ஜாதவ் ஆகியோரை நீக்கவும் சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்திருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், இவர்கள் இருவர் குறித்த முடிவை தோனிதான் எடுப்பார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவை கேப்டன் தோனியின் விருப்பத்தின்பரில் அணியில் நீடிக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஊடகத்துக்கு பேட்டியளித்த சிஎஸ்கே உயரதிகாரி ஒருவர் "சுரேஷ் ரெய்னா சிஎஸ்கேவில் நீடிக்கிறார். தோனிதான் கேப்டன். ஹர்பஜனை தவிர வேறு சில வீரர்களும் விடுவிக்கப்படுகிறார்கள். எந்தெந்த வீரர்கள் அணியில் நீடிக்கிறார்கள் என்ற விவரம் இன்று மாலை அறிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.