விளையாட்டு

இப்படி இருக்குமா சிஎஸ்கேவின் அணி ?

இப்படி இருக்குமா சிஎஸ்கேவின் அணி ?

jagadeesh

ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்க இருக்கும் நிலையில் மும்பைக்கு எதிராக நாளை களமிறக்கப்படவுள்ள சிஎஸ்கே அணியின் 11 வீரர்கள் யார் யார் என்பது பெரும் கேள்விக் குறியாக இருக்கிறது.

சிஎஸ்கே அணியின் முக்கிய பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா இந்தாண்டு தொடரிலிருந்து விலகியுள்ளதால் அந்த இடத்தில் யார் களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வியும் தொடர்ந்து எழுப்பப்படுகிறது. அதேபோல அபுதாபி ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படும் நிலையில் நாளைய லெவனில் எந்த சுழற்பந்துவீச்சாளர் இடம் பெறுவார் என்ற கேள்வியும் எழுகிறது.

ஆனால் பல கிரிக்கெட் வல்லுனர்களின் கருத்துப்படி நாளையப் போட்டியில் சிஎஸ்கே தரப்பில் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன், டூ பிளஸிஸ் களமிறக்கப்படுவார்கள் என்றே தெரிகிறது. இதற்கடுத்து மூன்றாவது இடத்தில் அம்பத்தி ராயுடுவும், 4 ஆம் இடத்தில் கேப்டன் தோனியும் களம் காண்பார்கள் என்பதே இப்போதைய கணிப்பாக இருக்கிறது. இதற்கடுத்தப்படியாக 5 மற்றும் 6 ஆவது வீரராக கேதர் ஜாதவ்வும், ரவீந்திர ஜடேஜாவும் களமிறக்கப்படலாம்.

மிக முக்கியமாக 7 ஆம் இடத்தில் ஆல்ரவுண்டராக பிராவோ நிச்சயமாக அணியில் இடம்பெறுவார். இதற்கடுத்து வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் மற்றும் தீபக் சாஹரும். சுழற்பந்துவீச்சாளர்களாக பியூஷ் சாவ்லாவும், இம்ரான் தாஹீரும் களமிறக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த லெவன் நாளை களமிறக்கப்படும் பட்சத்தில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே சம பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி:

ஷேன் வாட்சன்
டூப்ளசிஸ்
அம்பத்தி ராயுடு
தோனி
கேதர் ஜாதவ்
ரவீந்திர ஜடேஜா
பிராவோ
ஷர்துல் தாக்கூர்
பியூஷ் சாவ்லா
தீபக் சாஹர்
இம்ரான் தாஹீர்