விளையாட்டு

‘633 ரன் குவிப்பு’ - வெறும் 2 ரன்களில் ஆரஞ்சு கேப்பை மிஸ் செய்த டூ ப்ளசிஸ்!

‘633 ரன் குவிப்பு’ - வெறும் 2 ரன்களில் ஆரஞ்சு கேப்பை மிஸ் செய்த டூ ப்ளசிஸ்!

EllusamyKarthik

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூ ப்ளசிஸ் என இருவரும் நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இருவரும் இந்தியா மற்றும் அமீரகம் என இரண்டு விதமான ஆடுகளங்களிலும் அசத்தலாக விளையாடி உள்ளனர். 

இருவரும் 16 இன்னிங்ஸ்களில் விளையாடி தொடரில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். ருதுராஜ் 635 ரன்கள் உடன் முதலிடத்தையும், டூ ப்ளசிஸ் 633 ரன்கள் உடனும் சீசனை நிறைவு செய்துள்ளனர். அவர்களது ஆட்டம் சென்னை அணிக்கு வெற்றி தேடி தந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரருக்கான ரேஸில் இருவருக்கு இடையிலும் ஆரோக்கியமான போட்டி இருந்ததை பார்க்க முடிந்தது. 

கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு முன்னதாக ருதுராஜ் 603 ரன்களை குவித்திருந்தார். டூ ப்ளசிஸ் 547 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இறுதி போட்டியில் 86 ரன்களை சேர்த்து, வெறும் இரண்டே ரன்கள் வித்தியாசத்தில் ஆரஞ்சு கேப் வெல்லும் வாய்ப்பை சக அணி வீரர் ருதுராஜிடம் இழந்தார். அவர் அதை சேர்த்திருந்தார் இருவரும் கூட்டாக ஆரஞ்சு நிற தொப்பியை பகிர்ந்துக் கொள்ளும் வாய்ப்பு கூட அமைந்திருக்கலாம்.