விளையாட்டு

“தோனி வெளியேறினால் சிஎஸ்கே என்ன செய்யப் போகிறார்கள்? ” - சோயப் அக்தர் அதிருப்தி

“தோனி வெளியேறினால் சிஎஸ்கே என்ன செய்யப் போகிறார்கள்? ” - சோயப் அக்தர் அதிருப்தி

ச. முத்துகிருஷ்ணன்

சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக செயல்படவில்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

நேற்று மும்பை இந்தியன்ஸிடம் தோல்வியை சந்தித்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப்களுக்கு தகுதி பெறத் தவறியதால், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் லீக் போட்டிகளுடன் நடையை கட்டுகிறது. சீசன் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸில் நிறைய நடந்துள்ளது, இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ரவீந்திர ஜடேஜா கேப்டனாக காலடி எடுத்து வைத்து, சென்னை அணி ஐபிஎல்லில் அவர்களின் மோசமான தொடக்கங்களில் ஒன்றை சந்தித்தது.

சென்னை அணியின் சீசன் மற்றும் முழு கேப்டன் சாதனையையும் பகுப்பாய்வு செய்யும் போது, முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், "சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக செயல்படவில்லை" என்று கூறினார். மேலும் சென்னை அணி அடுத்த சீசனில் புதிய அணுகுமுறையுடன் திரும்ப வேண்டும் என்று கூறினார். "சிஎஸ்கே நிர்வாகம் சீரியஸாக இல்லை என்று உணர்ந்தேன். தோனி வெளியேறினால் என்ன செய்யப் போகிறார்கள்? திடீரென்று ஏன் ரவீந்திர ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி கொடுத்தார்கள்? முடிவை அவர்களால்தான் விளக்க முடியும். அடுத்த சீசனில் தெளிவான மனதுடன் வர வேண்டும். . அவர்களுக்குத் தேவையான வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்," என்று சோயிப் அக்தர் கூறினார்.

தோனியின் எதிர்காலம் குறித்தும் பேசிய அக்தர், மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டர் எப்போதும் அணிக்கு "சொத்து" என்று கூறினார். “தோனி ஒரு வழிகாட்டியாக வர விரும்பினால் அப்படியே வரலாம்... அவர் இந்தியாவிற்கு (2021 டி20 உலகக் கோப்பையில்) அதையே செய்தார். மேலும் அடுத்த இரண்டு சீசன்களில் அவர் தொடர்ந்து விளையாட விரும்பினால், அவர் ஒரு வழிகாட்டியாக இருந்தாலும் சரி. அல்லது தலைமைப் பயிற்சியாளராக இருந்தாலும் சரி அங்கிருந்து சென்னை அணியை எடுக்க முடிவு செய்தால், அது ஒரு மோசமான முடிவாக இருக்காது. அவர் ஒரு சொத்து," என்று அவர் கூறினார்.