சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 13 பேர் மீண்டதாக அறிவித்த தகவலை திருத்தம் செய்து அணியின் சிஇஓ கேஎஸ் விஸ்வநாதன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மற்றும் அணியின் பணியாளர்களுக்கு அண்மையில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த சூழலில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 13 பேருக்கும் நெகட்டிவ் வந்திருப்பதாக சிஎஸ்கேவின் சிஇஓ கேஎஸ் விஸ்வநாதன் பிடிஐக்கு தெரிவித்திருந்தார். இந்த தகவல் வெளியானது முதலே, 5 நாட்களில் எப்படி அனைத்து வீரர்களுக்கு நெகட்டிவ் வந்தது என்ற கேள்விகள் எழும்பின. இந்நிலையில் புதிய தகவலை விஸ்வநாதன் வெளியிட்டிருக்கிறார்.
அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 13 பேரை தவிர்த்து மற்ற அனைவருக்கு பரிசோதனையில் நெகட்டிவ் வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் அந்த 13 பேரும் 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.