யூரோ கோப்பை கால்பந்து தொடரின் குரோஷியா - செக் குடியரசு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
டி பிரிவில் இடம்பெற்றுள்ள சமபலம் கொண்ட இவ்விரு அணிகளும் ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 37 ஆவது நிமிடத்தில் செக் அணிக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை பேட்ரிக் கோலாக மாற்றி அணியை முன்னிலை பெறச்செய்தார்.
பின்னர் சுதாரித்துக் கொண்ட குரோஷிய அணி, இரண்டாம் பாதி தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே இவான் பெரிசிக்கின் மூலம் ஒரு கோலை வசப்படுத்தியது. அதன் பின்னர் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.