கிறிஸ்டியானோ ரொனால்டோ எக்ஸ் தளம்
விளையாட்டு

’The Real G.O.A.T' | 900 கோல்கள்.. கால்பந்து வரலாற்றில் இமாலய சாதனை.. உணர்ச்சிவசப்பட்ட ரொனால்டோ!

Prakash J

கால்பந்து உலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர வீரராக விளங்குபவர், கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவர், கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்திருந்தாலும் தற்போது புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். UEFA நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் 34-வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தார்.

இதன்மூலம் தற்போது வரை கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். 2022 ஃபிபா உலகக் கோப்பை, 2024 யூரோ கோப்பை ஆகியவற்றில் ரொனால்டோ அதிக கோல்களை அடிக்கவில்லை. அதனால், அவர் மீது விமர்சனம் இருந்தது.

இந்த நிலையில் அவர் நேஷன்ஸ் லீக் தொடரில், குரோஷியாவுக்கு எதிராக கோல் அடித்திருப்பதுடன் புதிய சாதனைக்கும் சொந்தமாகி இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக லியோனல் மெஸ்ஸி 859 கோல் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.

இதையும் படிக்க: பாகிஸ்தான் | ஆஃபர் விலையில் திறக்கப்பட்ட மால்.. அரை மணிநேரத்தில் சூறையாடிய பொதுமக்கள்.. #ViralVideo

இந்த சாதனை குறித்து, “இது, நான் நீண்டகாலமாக அடைய விரும்பிய ஒரு மைல்கல். நான் இந்த எண்ணிக்கையை அடைவேன் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால், நான் தொடர்ந்து விளையாடும்போது, ​​அது இயல்பாக நடக்கும். இது ஒரு மைல்கல் என்பதால் உணர்ச்சிவசப்பட்டேன்.

இது வேறு ஒரு மைல்கல் போலவும் தெரிகிறது. ஆனால், எனக்கும் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் மட்டுமே தெரியும், ஒவ்வொரு நாளும் வேலைசெய்வது, உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் 900 கோல்களை அடிப்பது எவ்வளவு கடினம் என்பது. என்னுடைய கேரியரில் இது ஒரு தனித்துவமான மைல்கல்” என்றார்.

இதையும் படிக்க: விமான நிலையத்தில் சூட்கேஸைக் கடித்து சாப்பிட்ட இளம்பெண்.. அதிர்ந்த பயணிகளுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!