dhoni - jadeja - ruturaj web
கிரிக்கெட்

தோனிக்கு 4 கோடி.. ருதுராஜுக்கு 18 கோடி! 2025 IPL-ல் CSK வீரர்களின் சம்பளம் என்னவாக இருக்க வாய்ப்பு?

2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக CSK அணியில் தக்கவைக்கப்படும் வீரர்களுக்கான சம்பளம் என்னவாக இருக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்..

Rishan Vengai

2025 ஐபிஎல் தொடரானது மெகா ஏலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. எம்எஸ் தோனி, ரோகித் சர்மா முதலிய ஸ்டார் கேப்டன்களின் மூவ் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், 2025 ஐபிஎல் தொடரானது தற்போதே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 ipl

இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்டிருக்கும் 2025 ஐபிஎல் தொடருக்கான தக்கவைப்பு விதிமுறைகள் ரசிகர்களிடையே மேலும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வெளியிடப்பட்டிருக்கும் 2025 ஐபில் மெகா ஏலத்திற்கான விதிமுறைகளின் படி,

  • ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை மெகா ஏலத்திற்கு முன்பாக தக்க வைத்துக்கொள்ளலாம். அதில் ஒரு UNCAPPED வீரரை கட்டாயம் தக்க வைக்க வேண்டும் என்ற விதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.

  • தக்கவைப்பு மற்றும் RTM களுக்கான கலவையைத் தேர்ந்தெடுப்பது ஐபிஎல் உரிமையின் விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளது. 6 தக்கவைப்புகளில் அதிகபட்சமாக 5 கேப்டு வீரர்களும் (இந்திய & வெளிநாடுகள்), அதிகபட்சமாக 2 கேப் செய்யப்படாத வீரர்களும் இருக்கலாம். ஆனால் நிச்சயம் ஒரு அன்கேப்டு வீரர் இடம்பெற்றிருக்க வேண்டும்.

  • வீரர்களை வாங்க அணிகள் 120 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம்.

  • 2025 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரருக்கு ஒவ்வொரு போட்டிக்கும் ஏழரை லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டும் என்றால் மெகா ஏலத்தில் நிச்சயம் பதிவு செய்ய வேண்டும். மெகா ஏலத்தில் பதிவு செய்யாத வெளிநாட்டு வீரர்கள் மினி ஏலத்தில் பங்கேற்க முடியாது.

  • ஏலத்தில் எடுக்கப்பட்ட பின் தேவையில்லாத காரணத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் வீரர்கள் 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்படும்.

  • IMPACT PLAYER விதிமுறை 2027 வரை தொடரும்

  • சர்வதேச போட்டிகளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற இந்திய வீரர்கள் UNCAPPED PLAYER ஆக கருதப்படுவார்கள் என்ற விதி மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

csk

தக்கவைப்பு தொகையில் மாற்றம், வீரர்களுக்கு ஊக்கத்தொகை, தக்கவைக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கை 6 என அனைத்தும் அறிவிக்கப்பட்ட நிலையில், எந்த அணி எந்தெந்த வீரர்களை தக்கவைத்து எந்த வீரர்களை எல்லாம் வெளியேற்றும் என்ற அறிவிப்பானது விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்க வாய்ப்புகள் இருக்கிறது, அவர்களுக்கான சம்பளம் 2025 ஐபிஎல் தொடரில் என்னவாக இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்..

தோனிக்கு ரூ.4 கோடி..

சர்வதேச போட்டிகளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற இந்திய வீரர்கள் UNCAPPED PLAYER ஆக கருதப்படுவார்கள் என்ற பழைய விதிமுறை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், நிச்சயம் எம் எஸ் தோனி 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் அங்கம் வகிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

தோனி

அப்படி தோனி சிஎஸ்கே அணியில் விளையாடவேண்டும் என்றால், அவரை சிஎஸ்கே நிர்வாகம் விடுவித்து பின்னர் புதிய அன்கேப்டு விதிமுறையின் படி ரூ.4 கோடிக்கு தக்கவைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தோனி இப்போது அதிக பந்துகளை எதிர்கொள்வதில்லை என்றாலும், அவர் களத்தில் இருப்பது சிஎஸ்கே அணிக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 2025 ஐபிஎல்லில் தோனி விளையாட முடிவு செய்தால் நிச்சயம் ரூ.4 கோடி சம்பாதிப்பார்.

ருதுராஜ் கெய்க்வாடுக்கு ரூ.18 கோடி..

தோனிக்கு மாற்றான சிஎஸ்கே அணியின் கேப்டனாக நிச்சயம் ருதுராஜ் கெய்க்வாட் தொடருவார் என்பதால், அவருக்கு பெரும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சிஎஸ்கே அணி தக்கவைக்கும் வீரர்களில் நிச்சயம் ருதுராஜ் கெய்க்வாட்டின் பெயர் முதல் தேர்வாக இருந்தால், அவருக்கு ரூ.18 கோடி அளவிலான பெரும் தொகை வழங்கப்படும்.

ருதுராஜ் கெய்க்வாட்

2022 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு ருதுராஜ் கெய்க்வாட்டை சிஎஸ்கே அணி ரூ.6 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. சிஎஸ்கே அணியின் கேப்டன் என்ற முறையில் அவருக்கு ரூ.18 கோடி வழங்கப்படும் என தெரிகிறது.

ஜடேஜாவுக்கு ரூ.14 கோடி..

2022 ஐபிஎல் மெகா ஏலத்தின்போது சிஎஸ்கே அணியின் முதல் தேர்வாக இருந்த ரவீந்திர ஜடேஜா, ஐபிஎல் 2022 முதல் 2024 வரை ரூ.16 கோடி சம்பளம் பெற்றார். சீசனுக்கு முன்பாக தோனிக்கு மாற்று கேப்டனாக ஜடேஜா பார்க்கப்பட்டார். ஆனால் பின்பு சில குளறுபடிகளுக்குபிறகு மீண்டும் தோனியே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஜடேஜா

ஜடேஜா கேப்டன் மெட்டீரியலாக இல்லாத பட்சத்தில், சிஎஸ்கேவின் இரண்டாவது தேர்வாகத் தக்கவைக்கப்படலாம். அப்படி தக்கவைக்கப்பட்டால் ரவீந்திர ஜடேஜா அவருடைய சம்பளத்தை குறைக்க வேண்டியிருக்கும். நட்சத்திர ஆல்-ரவுண்டர் வீரரான ஜட்டு முதன்முதலில் 2012 சீசனில்ல் CSK அணியில் சேர்ந்தார். 2025 ஐபிஎல் தொடரில் ஜடேஜா ரூ.14 கோடி சம்பளம் பெறுவார் என தெரிகிறது.

சிமர்ஜீத் சிங்குக்கு ரூ.4 கோடி..

கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் பாதி தொடரின்போது அணிக்குள் வந்த் சிமர்ஜீத் சிங், தன்னுடைய அற்புதமான வேகப்பந்துவீச்சுமூலம் எல்லோரையும் கவர்ந்தார். வலது கை வேகப்பந்து வீச்சாளர் சிஎஸ்கே அணிக்காக 10 ஆட்டங்களில் சிறப்பாக பந்துவீசி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அவரின் பவுலிங் எகானமியும் 8.63 ஆகவே இருந்தது.

சிமர்ஜீத் வருங்கால நட்சத்திரமாக இருக்க அதிகப்படியான வாய்ப்பாக இருப்பதால், அவரை அன்கேப்டு வீரராக சிஎஸ்கே அணி நிச்சயம் தக்கவைக்கும், சிஎஸ்கே அவரை மெகா ஏலத்திற்கு முன் வெளியிட வாய்ப்பில்லை. அப்படி தக்கவைக்கப்பட்டால் 2025 ஐபிஎல் தொடரில் சிம்சர்ஜீத் ரூ.4 கோடியை சம்பளமாக பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

pathirana - dube

சிஎஸ்கே அணியில் பதிரானாவின் இடம் உறுதியானது என்பதால் வெளிநாட்டு வீரர்களில் பதிரானா தக்கவைக்கப்படுவார். அவருடன் ஷிவம் துபேவும் அணியில் தக்கவைக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. குறைந்தபட்சமாக சிஎஸ்கே அணியின் 6 தக்கவைக்கும் வீரர்கள், “தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, பதிரானா, சிமர்ஜீத் சிங், ஷிவம் துபே” முதலிய 6 வீரர்களாக இருக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது.