Virat Kohli Twitter
கிரிக்கெட்

ரெஸ்ட் கொடுத்ததற்கு விராட் கோலி செய்த சேட்டை! வைரலாகும் க்யூட் வீடியோ!

Rishan Vengai

கடந்த ஆகஸ்ட் 30தேதி முதல் நடந்துவரும் 2023 ஆசியக்கோப்பை தொடர் அதன் கடைசி லீக் போட்டியை எட்டியுள்ளது. கோப்பையை உறுதி செய்யும் இறுதிப்போட்டியானது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் ஞாயிறு கிழமை கொழும்புவில் நடைபெறவிருக்கிறது.

Shardul Thakur

இந்நிலையில் கடைசி லீக் போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் விளையாடிவருகின்றன. இந்திய அணியில் பல முக்கியமான வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஸ்குவாடில் இருந்த மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணியில் இளம் வீரர் திலக் வர்மாவிற்கு முதல் போட்டிக்கான வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவ், பரிசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி முதலிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, சிராஜ், குல்தீப் முதலிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ரெஸ்ட் கொடுத்ததற்கு விராட் கோலி செய்த சேட்டை!

இன்று 3 மணிக்கு தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கத்திலேயே அதிச்சிகொடுத்தார் முகமது ஷமி. விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸை ஷமி போல்டாக்கி வெளியேற்ற, தன்னுடைய பங்கிற்கு அறிமுக வீரர் ஹாசனை போல்டாக்கி வெளியேற்றினார் ஷர்துல் தாக்கூர்.

Shakib Al Hasan

அடுத்துவந்த அனமுல்லை 4 ரன்னில் ஷர்துல் வெளியேற்ற, மெஹிதி ஹாசனை 13 ரன்னில் வெளியேற்றி இந்த தொடரில் தன்னுடைய முதல் விக்கெட்டை கைப்பற்றினார் அக்சர் பட்டேல். 59 ரன்களிலேயே அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் டோவ்ஹிட் ஹ்ரிடோய் (Towhid Hridoy ) நிலையான ஆட்டத்தால் 30 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களோடு விளையாடி வருகிறது. கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 67 ரன்களுடன் நிதானமாக விளையாடிவருகிறார்.

போட்டியின் 14 ஓவர் முடிவின் போது வீரர்களுக்கு டிரிங்ஸ் ப்ரேக் விடப்பட்டது. அப்போது இந்திய வீரர்களுக்கு டிரிங்க்ஸ் பேக்கை எடுத்துவந்த விராட் கோலி, ஒருகனம் மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது ஜாலியான கேரக்டர் மூலம் குஷியாக்கினார். டிரிங்க்ஸை எடுத்துக்கொண்டு ஓடிவந்த அவர் ஏதோ முக்கியான சூழலில் ஓடிவருவது போல சீரியஸாக குதித்து குதித்து ஓடிவருவது போல் பாவனை செய்தார். இந்த போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கும் நிலையில் கோலி செய்த இந்த சேட்டை வீடியோவானது தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.