கோலி - சச்சின் டிவிட்டர்
கிரிக்கெட்

147 ஆண்டில் முதல்வீரர்.. 58 ரன்களே மீதம்.. சச்சினின் ஆல்டைம் ரெக்கார்டை உடைக்கவிருக்கும் கோலி!

ரன்மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி டி20 கிரிக்கெட் வடிவத்திலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவிருக்கிறார்.

Rishan Vengai

கிங், ரன் மெஷின் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விராட் கோலி ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார், இதன்பொருள் 35 வயதான நட்சத்திர கிரிக்கெட் வீரரை இனி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே நம்மால் பார்க்க முடியும்.

ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகராகவும், விராட் கோலியின் ரசிகராகவும் பார்த்தால் 100 சதங்கள் என்ற இமாலய சாதனையை கோலி எட்டுவாரா? மாட்டாரா? என்ற கவலை ஏற்கனவே எழுந்துவிட்டது. 80 சர்வதேச சதங்கள் அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கும் விராட் கோலி, சச்சினின் 100 சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க 20 சதங்கள் பின்தங்கியுள்ளார்.

விராட் கோலி, சச்சின்

இந்நிலையில் அந்த சாதனையை முறியடிக்க நேரம் எடுக்கும் என்றாலும், சச்சினின் முறியடிக்கப்படாத இன்னொரு சாதனையை முறியடிக்கும் அருகாமையில் விராட் கோலி இருந்துவருகிறார்.

58 ரன்களே மீதம்..

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்குபெற்று விளையாடவிருக்கிறது. செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் தொடரில் எல்லோரின் பார்வையும் விராட் கோலியின் மீதுதான் இருக்கப்போகிறது. நீண்டநாட்களாக டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்துவரும் கோலி, எப்படி கம்பேக் கொடுக்க போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லோரிடமும் இருந்துவருகிறது.

விராட் கோலி

இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் 58 ரன்களை விராட் கோலி அடிக்கும் பட்சத்தில், சச்சின் டெண்டுல்கரின் முறியடிக்கப்படாத சாதானையை விராட் கோலி முறியடிப்பார். 58 ரன்கள் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 27000 ரன்களை அதிவேகமாக பதிவுசெய்த வீரராக மாறி சாதனை படைப்பார்.

விராட் கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் 623 இன்னிங்ஸ்களில் (226 டெஸ்ட் இன்னிங்ஸ், 396 ஒருநாள் இன்னிங்ஸ், 1 டி20 இன்னிங்ஸ்) விளையாடி 27,000 ரன்களை மிக வேகமாக எட்டியவராக டெண்டுல்கர் முதலிடத்தில் இருந்துவருகிறார்.

இதையும் படிக்க: 2025 ஐபிஎல்லில் தோனி ஓய்வு? சிஎஸ்கே பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

விராட் கோலி இதுவரை 591 இன்னிங்ஸ்களில் விளையாடி 26942 ரன்கள் எடுத்துள்ள நிலையில், கோலி தனது அடுத்த எட்டு இன்னிங்ஸ்களில் மேலும் 58 ரன்கள் எடுத்தால் 27,000 ரன்களை அதிவேகமாக பூர்த்திசெய்து விராட் கோலி வரலாற்று சாதனை படைப்பார்.

அதாவது 147 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 600 இன்னிங்ஸ்களுக்குள் 27,000 ரன்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரராக விராட் கோலி வரலாறு படைப்பார்.

virat kohli

இதுவரை, டெண்டுல்கரைத் தவிர, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் இலங்கையின் குமார் சங்கக்கார ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் 27000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.