tim southee - sehwag web
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்.. வீரேந்திர சேவாக் சாதனையை முறியடித்த டிம் சவுத்தீ!

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 65 ரன்கள் அடித்த டிம் சவுத்தீ அதிரடி வீரர் விரேந்திர சேவாக் சாதனையை முறியடித்தார்.

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. அதற்குபிறகு விளையாடிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திராவின் அதிரடியான சதத்தால் 402 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.

tim southee

ஆனால் ரச்சின் ரவீந்திரா மட்டுமே 402 ரன்களை குவிக்க காரணமா என்றால் இல்லை, மறுமுனையில் 9வது வீரராக களத்திற்கு வந்த நியூசிலாந்தின் டிம் சவுத்தீ சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டு இந்திய அணியின் பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.

73 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தீ 65 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணியை 356 ரன்கள் முன்னிலைக்கு அழைத்துச்சென்றார்.

வீரேந்திர சேவாக் சாதனையை முறியடித்த டிம் சவுத்தீ!

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4 சிக்சர்களை பறக்கவிட்ட டிம் சவுத்தீ, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் வரிசையில் வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்தார்.

அதிரடி வீரர் சேவாக் 91 சிக்சர்களை அடித்திருக்கும் நிலையில், டிம் சவுத்தீ 93 சிக்சர்களுடன், சேவாக்கை பின்னுக்கு தள்ளினார்.

sehwag

டெஸ்ட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள்:

* பென் ஸ்டோக்ஸ் - 131 சிக்சர்கள்*

* பிரண்டன் மெக்கல்லம் - 107 சிக்சர்கள்

* ஆடம் கில்கிறிஸ்ட் - 100 சிக்சர்கள்

* க்றிஸ் கெய்ல் - 98 சிக்சர்கள்

* ஜாக் காலிஸ் - 97 சிக்சர்கள்

* டிம் சவுத்தீ - 93 சிக்சர்கள்*

* வீரேந்திர சேவாக் - 91 சிக்சர்கள்

* ரோகித் சர்மா - 88 சிக்சர்கள்*