பெரேரா - ரோகித் web
கிரிக்கெட்

”இந்த T20 WC-ல் ரோகித் சர்மா இந்தியாவிற்கு சிறப்பானதை செய்வார்!” - முன்னாள் இலங்கை வீரர்

”இந்திய அணி இந்த டி20 உலகக்கோப்பையில் சிறப்பான அணியாக இருக்கும், ரோகித் சிறப்பாக வழிநடத்தும் போது கேப்டனை மாற்றவேண்டிய அவசியமில்லை” என முன்னாள் இலங்கை வீரர் தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிவரை தோல்வியே சந்திக்காமல் சென்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பைனலில் தோல்வியுற்று வெளியேறியது. எப்படியும் ரோகித் தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் கோப்பை வெல்லும் என்று எதிர்ப்பார்க்கட்ட சூழலில் எல்லாம் தலைகீழாக மாறிப்போனது.

உலகக்கோப்பை தோல்வியால் விரக்தியடைந்த ரோகித் சர்மா, டி20 ஃபார்மேட்டிலிருந்து விலகவிருப்பதாகவும், டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க மாட்டார் என்றும் தகவல் வெளியானது. ரோகித் சர்மாவும் கிட்டத்தட்ட அந்த மனநிலையில் தான் இருந்தார் என்றே சொல்லலாம். ஆனால் அனைத்திலிருந்து மீண்டு வந்துள்ள ரோகித் சர்மா, கேப்டனாக தன்னுடைய இறுதிவாய்ப்பை கையில் எடுத்துள்ளார்.

ரோகித் சர்மா

இந்நிலையில் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு தோற்கடிக்க முடியாத அணியாக இருந்ததை போலவே, டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பானதாக இருக்கும் என்றும், அவர்கள் இந்த உலகக்கோப்பையில் ஏதோஒன்றை சிறப்பாக செய்யப்போகிறார்கள் என்று முன்னாள் இலங்கை ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா தெரிவித்துள்ளார்.

ரோகித் தலைமையில் இந்திய அணி சிறப்பானதை செய்யும்!

ANI உடன் பேசியிருக்கும் திசரா பெரேரா, இந்திய அணியின் பலம் குறித்தும், ரோகித் சர்மா கேப்டன்சி குறித்தும் ஓப்பனாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசியிருக்கும் பெரேரா, “2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா சிறப்பாக ஏதாவது செய்யும் என்று நான் நினைக்கிறேன். நாம் ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலேயே பார்த்தோம், அங்கு அவர்கள் இறுதிப் போட்டி வரை தோற்கடிக்கப்படாத அணியாக இருந்தார்கள். டி20 உலகக் கோப்பையிலும் அவர்களால் ஏதாவது சிறப்பாகச் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Rohit Sharma

இந்திய அணியில் கேப்டன்சி மாற்றம் வேண்டுமா என்பது பற்றி கூறிய அவர், “நான் எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் செல்ல விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக ரோகித் சர்மா சிறப்பாக பணியாற்றியுள்ளார். அதனால் டி20 உலகக் கோப்பைக்கு முன், கேப்டன் பதவியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. நான் ரோகித் சர்மாவுடன் செல்ல விரும்புகிறேன், அவருடைய தலைமையில் இந்திய அணி சிறப்பானதாக செல்லும்” என்று பெரேரா மேலும் கூறினார்.

hasaranga

மேலும் இலங்கை குறித்து பேசிய அவர், “இப்போது நாங்கள் சரியான பாதையில் இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன், கடந்த சில போட்டிகளில் அடைந்த நல்லவெற்றிகள் மூலம் வெற்றிபெறும் பழக்கத்தைப் பெற்றுள்ளோம். இது தான் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தேவையான ஒன்று. இந்த டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.