ind vs nz x
கிரிக்கெட்

IND v NZ முதல் டெஸ்ட் | பெங்களூருவில் வெளுத்து வாங்கும் மழை.. முதல்நாள் ஆட்டம் ரத்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டம் மழை காரணமாக ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

ind vs nz

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய அணிக்கு கடைசி இரண்டு தொடர்களாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்கள் அமைந்திருக்கின்றன. இந்த இரண்டு தொடர்களிலும் இந்தியா வென்றுவிட்டால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிடும்.

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியானது அடுத்தாண்டு ஜூன் 11 முதல் ஜுன் 15-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. ஜுன் 16-ம் தேதி ரிசர்வ் டே ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முக்கியமான டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது.

மழையால் முதல்நாள் ஆட்டம் ரத்து..

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அக்டோபர் 16-ம் தேதியான இன்று நடைபெறவிருந்தது.

ind vs nz

சென்னையில் மட்டுமில்லாமல் பெங்களூரிலும் மழை காரணமாக சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

virat kohli

இந்நிலையில் மழையின் தாக்கம் போட்டியிலும் இருக்குமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், மழை காரணமாக டாஸ் போடப்படாமலேயே ஆட்டம் தடைபட்டது.

மழை தொடர்ந்து கொண்டே இருந்த காரணத்தால் இந்தியா-நியூசிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டமானது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. டாஸ் நாளை காலை 8.45 மணிக்கு போடப்பட்டு, போட்டியானது 9.15 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ind vs nz

இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), ரிஷப் பந்த் (வி.கீ), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, சர்பராஸ் கான், துருவ் ஜூரல், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்

நியூசிலாந்து அணி:

டாம் லாதம் (கேப்டன்), டாம் ப்ளூன்டெல் (வி.கீ), டெவான் கான்வே, வில் யங், கேன் வில்லியம்சன், மைக்கேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, மாட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, அஜாஸ் பட்டேலி, , வில்லியம் ஒரூக்கி