இந்தியா ட்விட்டர்
கிரிக்கெட்

உலகக்கோப்பை 2023: வெற்றி கைநழுவிப் போனது எப்படி..? இந்தியா தோற்றதற்கு மிக முக்கிய 5 காரணங்கள்!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Prakash J

2023 உலகக்கோப்பை தொடரில் மீண்டும் இந்திய அணியை வதம் செய்து, 6வது முறையாக (1987, 1999, 2003, 2007, 2015) உலகக் கோப்பையைக் கைப்பற்றி, வரலாற்றை மாற்றி எழுதியது. முன்னதாக, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்களை எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 54 ரன்களும், கே.எல்.ராகுலும் 66 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அவ்வணியில் டிராவிஸ் ஹெட் 137 ரன்களும், லபுசேன் 58* ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிக்க: WC2023: 6வது முறையாக சாம்பியன்.. வரலாற்றை மாற்றி எழுதிய ஆஸ்திரேலியா! இந்தியாவின் போராட்டம் வீண்!

இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணங்கள்

இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணங்களில் சிலவற்றைப் பார்க்கலாம்.

அகமதாபாத் மைதானம் எந்த அணிக்கும் சாதகமாக இருக்காது எனக் கூறப்பட்ட நிலையில், முதலில் பேட் செய்ய நினைக்கும் அணி, குறைந்தபட்சம் 300 ரன்களாவது எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 240 ரன்களை மட்டுமே எடுத்தது. இது, தோல்விக்கு முதல் காரணம். ஒருவேளை இந்திய 280-300 ரன்கள் வரை எடுத்திருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம்.

அடுத்து, இந்திய அணி இன்னிங்ஸின்போது, சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் சென்றபிறகு ரோகித் சர்மா சற்று அதிரடியைக் குறைத்து, விக்கெட்டை இழக்காமல் நின்றிருக்க வேண்டும். தொடர்ந்து இந்திய வீரர்கள் ஆட்டமிழந்ததும், அதனால் ரன் வேட்டை குறைந்ததும் இந்திய அணிக்கு தோல்விக்கு 2வது காரணம்.

இதையும் படிக்க: 2014 டூ 2023: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியும் இந்திய அணி தவறவிட்ட 9 ஐசிசி கோப்பைகள்!

அஸ்வினுக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்!

மூன்றாவதாக, இன்றைய போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினைக் களமிறக்கியிருக்க வேண்டும். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சிறப்பாக விளையாடக் கூடியவர். அவரை, கூடுதல் ஒரு பந்துவீச்சாளராகக் களமிறக்கி ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம். இதை, ரோகித் சர்மா தவறவிட்டு விட்டார்.

அஸ்வின்

நான்காவதாக இந்திய அணி, இன்று 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து மாறிமாறி பந்துவீசியது. இதனால், எந்த மாற்றமும் நிகழவில்லை. மாற்றுப் பந்துவீச்சாளர்கள் இல்லாததே இதற்குக் காரணம்.

ஐந்தாவதாக ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களின் விக்கெட்களை விரைவாகவே எடுத்தபோதும், டிராவிஸ் ஹெட் மற்றும் லபுசேன் விக்கெட்களை எடுக்க முடியாமல் இந்திய அணி திணறியது. இதனால், அவர்கள் நிலைத்துநின்று விளையாடி ரன்களைக் குவித்தனர். தவிர, இந்திய அணியில் இன்றும் பீல்டிங்கும் மிகவும் சொதப்பலாக இருந்தது. மேலும், எக்ஸ்ட்ரா வகையிலும் ரன்களை (18) வழங்கி இருந்தனர்.

இதையும் படிக்க: சொதப்பிய இந்தியா.. மைதானத்தில் நிலவிய அமைதி; சொன்னதை செய்து காட்டிய கம்மின்ஸ்! 241 ரன்கள் இலக்கு