இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகளிலும் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை வென்று அசத்தியது.
இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை குவாலியரில் தொடங்குகிறது. முதல் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய டி20 கேப்டன் ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக செயல்படுவார் என்பதை உறுதிப்படுத்தினார்.
வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் மோதும் முதல் டி20 போட்டியானது நாளை 7 மணிக்கு குவாலியரில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் முதல் போட்டிக்கு முன்னதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “இந்த தொடரில் அபிஷேக் சர்மாவுடன் சேர்ந்து தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் விளையாடுவார். இரண்டு நாட்களாக இங்கு பயிற்சிசெய்து வருகிறோம், டி20 போட்டிக்கு ஏற்ற ஆடுகளமாக
குவாலியர் இருக்கிறது, ஆனால் ஃபிளாட் டிராக்காக இல்லாமல் பந்துவீச்சுக்கும் நன்றாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
அதேநேரத்தில் மயங்க் யாதவ் குறித்து பேசிய அவர், “மயங்க் யாதவை நான் ஒரு எக்ஸ்-ஃபேக்டராக பார்க்கிறேன். அவரால் என்ன செய்யமுடியும் என்பதை நாம் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டிலேயே பார்த்திருக்கிறோம். அவர் அணிக்கு கிடைத்தால் சிறப்பாக செயல்படுவார்” என்று தெரிவித்தார். இருப்பினும் மயங்க் யாதவ் அறிமுகத்தை பெறுவாரா என்பது குறித்து உறுதிப்பட அவர் தெரிவிக்கவில்லை.
இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்.கீ), ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜித்தேஷ் சர்மா ( wk), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ், திலக் வர்மா