Sreesanth picks all-time calmest XI web
கிரிக்கெட்

’ஆனா பாருங்க இவங்கள வச்சி குத்துச்சண்டையே நடத்தலாம்..’ ஆல்டைம் அமைதியான அணியை பிக் செய்த ஸ்ரீசாந்த்!

இந்தியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ஸ்ரீசாந்த் எப்போதைக்கும் அமைதியான 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வுசெய்தார். ஆனால் அந்த அணியில் இடம்பெற்ற அனைத்து வீரர்களும் ஆக்ரோசமான அணுகுமுறைக்கு பெயர் போனவர்கள்..

Rishan Vengai

கிரிக்கெட் விளையாட்டு என்பது எப்போதும் அதிகப்படியான உணர்ச்சிகளை உள்ளடக்கியதாக இருந்துவருகிறது. அது வீரர்களாக இருந்தாலும் சரி, ரசிகர்களாக இருந்தாலும் சரி தங்களுடைய அணி வெற்றியை தொடும்போது அதிகப்படியான மகிழ்ச்சியையும், தோல்வியை தழுவும்போது அதிகப்படியான வருத்தத்தையும் வெளிப்படுத்துவது இயல்பான ஒன்றுதான்.

ஆனால் இவை அனைத்தையும் மீறி சில நேரங்களில் போட்டியின்போதே வீரர்கள் சண்டையிட்டு கொள்வதும், வார்த்தைப்போரில் ஈடுபடுவதும், சில நேரங்களில் தாக்கிக்கொள்ளும் சம்பவங்களும் கூட இதற்குமுன்னர் நடந்துள்ளது. இதேபோன்ற சம்பவங்கள் ரசிகர்களுக்கு இடையேயும் நடப்பது வாடிக்கையாகவே இருந்துவருகிறது.

sreesanth

அந்தவகையில் பந்துவீசும் போது எப்போதும் ஆக்ரோசமான அணுகுமுறையை வெளிப்படுத்தும் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ஸ்ரீசாந்த், தன்னுடைய அனைத்து நேர அமைதியான 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வுசெய்துள்ளார்.

ஹர்பஜன் சிங், சவுரவ் கங்குலி, கிரன் பொல்லார்டு முதலிய வீரர்கள் அடங்கிய அவரின் 11 வீரர்கள் கொண்ட அமைதியான அணியானது, எப்போதும் ஆக்ரோசமான அணுகுமுறைக்கு பெயர்போன வீரர்களை உள்ளடக்கியுள்ளது.

அனைத்துநேர அமைதியான அணி..

ஸ்போர்ட்ஸ்கீடா உடனான புதிய உரையாடலில், 2011 உலகக் கோப்பை வென்ற வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் ஒரு அனல் பறக்கும் 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வுசெய்தார். அதற்கு அவர் “அனைத்து நேர நல்ல வீரர்கள் கொண்ட அமைதியான அணி” என்று பெயரிட்டார்.

கங்குலி

அந்த அணியின் கேப்டனாக 2002-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான நாட்வெஸ்ட் தொடரை வென்றபோது டிரெஸ்ஸிங் ரூம் பால்கனியில் நின்று சட்டையை கழற்றி சுழற்றி ஆக்ரோசமான சவுரவ் கங்குலியை கேப்டனாக தேர்வுசெய்தார். அது மட்டுமில்லாமல் அதனைத்தொடர்ந்து பல இடங்களில் கங்குலி ஒரு அனிமேஷன் கதாபாத்திரமாகவே அறியப்பட்டார்.

virat kohli - gambhir

தொடக்க வீரர்களாக கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலியை தேர்வுசெய்தார், இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்வதை கடந்து பல எதிரணி வீரர்களுடன் ஆக்ரோசமான மோதல் பின்னணியை கொண்டவர்கள்.

இதையும் படிக்க: ’நூற்றாண்டின் சிறந்த பந்து’ to ’கிரிக்கெட்டில் 2935 விக்கெட்டுகள்’! ஷேன் வார்னே எனும் ஸ்பின் மன்னன்!

ரிக்கி பாண்டிங்

மூன்றாவது வீரராக ரிக்கி பாண்டிங்கை ஸ்ரீசாந்த் சேர்ந்திருந்தார், ஆஸ்திரேலியா அணிக்குள் ஆதிக்க மனநிலையை எடுத்துவந்தவர்களில் ரிக்கி பாண்டிங் முக்கியானமானவராக இருந்துள்ளார். அவர் தலைமையில் கருணையே காமிக்காத ஒரு அணியாக ஆஸ்திரேலியா உலக கிரிக்கெட்டில் வலம் வந்தது.

ஷாகித் அப்ரிடி

மிடில்-ஆர்டரில் முன்னாள் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச கேப்டன்களான ஷாகித் அப்ரிடி மற்றும் ஷாகிப் அல் ஹசன் இடம்பெற்றுள்ளனர். இரண்டுபேருமே அதிகப்படியான கோபத்திற்கு பெயர்போனவர்கள், அதிலும் ஷாகிப் அல் ஹசன் தன்னுடைய மோசமான அணுகுமுறைக்காக பலமுறை தலைப்பு செய்திகளில் இன்றளவும் இருந்துவருகிறார்.

இதையும் படிக்க: ரிஸ்வான் தலைக்கு நேராக பந்தை எறிந்த ஷாகிப்! அபராதம் விதித்த ஐசிசி! WTC புள்ளிகளை இழந்த வங்கதேசம்!

ஷாகிப் அல் ஹசன்

ஃபினிசிங் பேட்ஸ்மேனாக கிரன் பொல்லார்டை ஸ்ரீசாந்த் இணைத்துள்ளார். பந்துவீச்சாளருக்கு எப்போதும் நைட்-மேர் பேட்ஸ்மேனாக அறியப்படும் பொல்லார்டு, பலமுறை பந்துவீச்சாளர்களிடம் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளார். ஒருமுறை பந்தை அவருக்கு நேராக வீசிய பவுலருக்கு எதிராக பேட்டை தூக்கி எறியும் அளவு கோபக்காரராக பொல்லார்டு இருந்துள்ளார்.

பொல்லார்டு

ஸ்ரீசாந்த் தன்னைத் தவிர, ஹர்பஜன் சிங், சோயப் அக்தர் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஆண்ட்ரே நெல் 4 பேரை பவுலர்களாக இணைத்துள்ளார். ஸ்ரீசாந்த் எப்போதும் பேட்ஸ்மேன்களிடம் சென்று முறைப்பதும், விக்கெட்டை எடுத்துவிட்டால் கத்துவதும் என எப்போதும் அனிமேட்டட் வீரராக இருந்துள்ளார். ஹர்பஜன் சிங் குறித்து சொல்லவே தேவையில்லை, ஐபிஎல் போட்டியின் போது ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்த நிகழ்வும் இருந்துள்ளது.

ஹர்பஜன்

ஷோயப் அக்தர் எப்போதும் பேட்ஸ்மேன்களை முறைப்பது போன்ற ஆக்ரோசமான அணுகுமுறைக்கு பெயர் போனவர், ஹர்பஜன், ஷோயப் அக்தர் நண்பர்களாக இருந்தாலும் களத்தில் எப்போதும் ஆக்ரோசமாக இருந்துள்ளனர்.

இதையும் படிக்க: குறைந்த விலையில் இப்படியொரு ஆஃபரா? Jio அறிமுகப்படுத்தும் 2 புதிய பட்ஜேட் ரீசார்ஜ் திட்டங்கள்!

ஷோயப் அக்தர்

மற்றொரு பவுலரான நெல், 2006-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் ஸ்ரீசாந்த் பந்துவீசும்போது ஆக்ரோசமான வார்த்தை பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தார்.

ஸ்ரீசாந்தின் ஆல்டைம் அமைதியான அணி:

கவுதம் கம்பீர், விராட் கோலி, ரிக்கி பாண்டிங் (துணை கேப்டன்), சவுரவ் கங்குலி (கேப்டன்), ஷாகித் அப்ரிடி, ஷகிப் அல் ஹசன், கிரன் பொல்லார்ட், ஹர்பஜன் சிங், ஷோயப் அக்தர், ஆண்ட்ரே நெல் மற்றும் ஸ்ரீசாந்த்.