வெற்றிக் களிப்பில் தென்னாப்ரிக்க அணி pt web
கிரிக்கெட்

”இன்னிங்ஸ் + 273 ரன்கள்” - டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த தென்னாப்ரிக்கா!

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்ரிக்க அணி தனது வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து தொடரையும் கைப்பற்றியுள்ளது.

Angeshwar G

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்க அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் சாட்டோகிராமில் அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கியது.

Tony de Zorzi, Tristan Stubbs

டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை மட்டும் இழந்து 575 ரன்களைக் குவித்தது தென்னாப்ரிக்க அணி. அதிகபட்சமாக Tony de Zorzi 177 ரன்களைக் குவித்தார். Tristan Stubbs 106 ரன்களையும், Mulder 105 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 159 ரன்களை மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய தென்னாப்ரிக்க அணியில் ரபாடா 5 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் ஃபாலோ ஆன் முறைப்படி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி, மீண்டும் அனைத்து விக்கெட்களையும் இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தென்னாப்ரிக்க அணி 273 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியையும் பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்ரிக்காவின் கேசவ் மகாராஜ் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

Keshav Maharaj

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்ரிக்க அணி தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன் 2017 ஆம் ஆண்டு இதே வங்கதேசத்திற்கு எதிராக தென்னாப்ரிக்காவில் நடந்த தொடரில், அந்த அணி இன்னிங்ஸ் மற்றும் 254 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்ததே சாதனையாக இருந்தது. அதுமட்டுமின்றி 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை தென்னாப்ரிக்க அணி வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆட்டநாயகனான தென்னாப்ரிக்க அணியின் Tony de Zorziயும், தொடர் நாயகனாக ரபாடாவும் தேர்வு செய்யப்பட்டனர்.