Quinton de Kock twitter
கிரிக்கெட்

தென்னாப்ரிக்க வரலாற்றில் முதல் வீரர்.. புதிய சாதனை படைத்த டி காக்.. அடுத்த டார்கெட் ரோகித், சச்சின்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர் குயின்டன் டிகாக் புதிய சாதனை படைத்துள்ளார்.

Prakash J

இந்தியாவில் நடைபெற்று வரும் ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. முதல் 4 இடங்களைப் பிடிக்க ஒருசில அணிகள் போட்டிபோட்டு வருகின்றன. இந்த நிலையில், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்க தொடக்க பேட்டர் குயின்டன் டி காக், புதிய சாதனை படைத்துள்ளார்.

nz vs sa team captains

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று (நவ.1) 32வது லீக் போட்டியில் புனே மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் முதல் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி, தென் ஆப்ரிக்காவை பேட் செய்ய பணித்தது.

Quinton de Kock

அதன்படி, அவ்வணியின் தொடக்க பேட்டரான டி காக், இன்றைய போட்டியில் மீண்டும் சதமடித்ததுடன் சரித்திர சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அவர் 103 பந்துகளில் 100* ரன்கள் எடுத்தார். நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் அவர் அடிக்கும் 4வது சதம் இதுவாகும். அவர் ஏற்கெனவே இலங்கை, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக சதம் அடித்திருந்தார். 114 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். டஸ்ஸன் 133 ரன்களுடன் சதம் விளாச தென்னாப்ரிக்க அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிறகு 357 ரன்கள் எடுத்தது. மில்லர் 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிக்க: உ.பி: லிஃப்ட்டில் நாயை அழைத்து வந்த பெண்மணி..கன்னத்தில் அறைவிட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி! வீடியோ

உலகக்கோப்பையில் அதிக சதம்!

உலகக்கோப்பை தொடர்களில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதல் இடத்தில் உள்ளார். அவர், கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்துள்ளார். அந்த வரிசையைல் டி காக், இலங்கை வீரர் குமார சங்ககராவுடன் 2வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர். தவிர, தென் ஆப்ரிக்க அணியில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலிலும் டிகாக் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Quinton de Kock

அவர், இன்றைய சதத்துடன் மொத்தம் 21 சதங்கள் எடுத்துள்ளார். இதற்கு முந்தைய இடங்களில் ஹாசிம் ஆம்லா (27 சதம்), ஏ.பி.டி.வில்லியர்ஸ் (25 சதம்) ஆகியோர் உள்ளனர். மேலும், குயின்டன் டி காக் நடப்பு உலகக்கோப்பை தொடரில் 500 ரன்கள் அடித்த முதல் பேட்டர் என்ற பெருமையையும் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

இதையும் படிக்க: போலந்து தற்காப்பு கலை போட்டி: மகனின் முன்னாள் காதலிக்கு குத்துவிட்டு சாய்த்த அம்மா! வைரல் வீடியோ!

500 ரன்களை கடந்த முதல் தென்னாப்ரிக்க வீரர்! 

தென் ஆப்ரிக்கா அணி 1992ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த நிலையில், அவ்வணியில் இதுவரை எந்தவொரு வீரரும் உலகக்கோப்பை தொடர்களில் 500 ரன்கள் எடுத்தது கிடையாது. தென் ஆப்ரிக்காவின் 31 வருட உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக குயின்டன் டிகாக் 500 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் நடப்பு தொடரிலும் இவரே அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளார்.

Quinton de Kock

நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் டிகாக்-விற்கு (500*) அடுத்து, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 413 ரன்களுடன் 2வது இடத்திலும், நியூசிலாந்து வீரர் 406 ரன்களுடன் 3வது இடத்திலும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா 398 ரன்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.

டிகாக் நடத்திவரும் ரன் வேட்டையால், உலகக்கோப்பையில் படைக்கப்பட்ட பிற சாதனைகளும் முறியடிக்க வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அடித்திருக்கும் 5 சதங்களை டிகாக் தகர்க்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (673 ரன்கள்) உலகக்கோப்பை தொடரில் அடித்திருக்கும் அதிகபட்ச ரன்களை முறியடிக்கவும் டிகாக்கிற்கு வாய்ப்பிருப்பதாகப் பேசப்படுகிறது.

இதையும் படிக்க: அந்தப் போட்டி! ஆஸ்திரேலியாவின் எண்ணத்தை சுக்குநூறாக உடைத்து வி.வி.எஸ்.லட்சுமண் செய்த தரமான சம்பவம்!