RCB vs DC X
கிரிக்கெட்

RCB First CUP Loading.. அதிரடியில் மிரட்டிய ஷபாலி; ஒரே ஓவரில் கைமாறிய ஆட்டம்! 113-ல் டெல்லி All Out!

2024 மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

Rishan Vengai

IPL மற்றும் WPL என இரண்டையும் எடுத்துக்கொண்டாலும் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதேயில்லை. அந்த அடிப்படையில் இதுவரை கோப்பையே வெல்லாத ஒரு அணி, கோப்பையை வென்று தோல்வி முகத்தை இன்று முடிவுக்கு கொண்டுவரும் என்ற எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

RCB vs DC

2024 மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியானது டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

சிக்சர்களால் டீல் செய்த ஷபாலி! ஒரே ஓவரில் 3 விக்கெட்டை அள்ளிய சோபி!

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷபாலி வெர்மா மற்றும் கேப்டன் மெக் லானிங் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபுறம் மெக் லானிங் வேடிக்கை பார்க்க, மறுமுனையில் ஆர்சிபி பவுலர்களை எல்லாம் பொறட்டி எடுத்த ஷபாலி வெர்மா 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு வேடிக்கை காட்டினார். உடன் மெக் லானிங்கும் 3 பவுண்டரிகள் விரட்ட, விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் விளையாட தொடக்க வீரர்கள் ஜோடி 7 ஓவருக்கு 64 ரன்கள் குவித்து மிரட்டினர்.

shafali verma

ஆர்சிபியின் ஸ்டார் பவுலர்களை எல்லாம் அட்டாக் செய்த ஷபாலி வெர்மா, எதிரணி கேப்டன் ஸ்மிரிதி மந்தானாவிற்கு தலைவலியாக மாறினார். “அங்க பாரு எல்லாரையும் அடிச்சி வெளுக்குறாங்க, யாராவது அந்த ஷபாலிய அவுட்டாக்குங்க பா” என ஆர்சிபி ரசிகர்கள் புலம்ப, டைம் அவுட் முடிந்து பந்துவீச வந்த சோபி மொலின்யூ, ஷபாலியை 44 ரன்களில் அவுட்டாக்கி வெளியேற்றினார்.

ஷபாலி வெளியேறியதும் களத்திற்கு பேட்டிங் ஆர்டர் மாறி முன்னதாகவே களத்திற்கு வந்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். என்ன டா ஒரு கண்டம் போனதும் இன்னொரு கண்டம் வருதேனு ஆர்சிபி ரசிகர்கள் புலம்ப, வெயிட் பண்ணுங்க கண்ணா என்று “ஜெமிமா, அலிஸா கேப்சி இருவரையும் அடுத்தடுத்து 0 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றிய” மொலின்யூ ஓரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை தலைகீழாக திருப்பினார்.

மெக் லானிங் அவுட்டாக தடுமாறிம் டெல்லி அணி!

64 ரன்னுக்கு 0 விக்கெட்டில் இருந்த டெல்லி அணி, சோபி மொலின்யூ வீசிய 8வது ஓவருக்கு பிறகு 64 ரன்னுக்கு 3 விக்கெட்டுகள் என மாறிய தடுமாறியது. உடன் பந்துவீச வந்த ஸ்ரெயங்கா பாட்டில் கேப்டன் மெக் லானிங்கை 23 ரன்னில் வெளியேற்ற ஆட்டம் ஆர்சிபியின் பக்கம் திரும்பியது.

மெக் லானிங் வெளியேறியதும் அடுத்தடுத்து வந்த மரிசான் கேப், ஜானசென், மின்னு மணி மூன்றுபேரும் 8, 3, 5 ரன்களுக்கு நடையை கட்ட 103 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. 19ஆவது ஓவரை வீசிய ஷ்ரேயங்கா பட்டேல் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணியை 113 ரன்களில் ஆல் அவுட் செய்தார். பட்டேலும் மொத்தமாக 4 விக்கெட் சாய்த்தார்.

ஆர்சிபி அணி தங்களுடைய 16 வருட கோப்பை கனவை எட்டிப்பிடிப்பதற்கான போராட்டத்தில் கிட்டதட்ட முக்கால்வாசி கிணறு தாண்டிவிட்டது என்றே சொல்லலாம். 114 ரன்கள் என்ற எளிதான இலக்கை விரட்டி கோப்பையை உறுதி செய்வதுதான் ஆர்.சி.பி வசம் இருக்கும் மீதி வேலை. காத்திருக்கும் ரசிகர்கள்.