ஷாகிப் அல் ஹசனை வங்கதேச அணியின் ஜாம்பாவான் வீரர் என்று மட்டும் சொல்லாமல், உலக கிரிக்கெட் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் என்று தான் சொல்லவேண்டும். 2006-ம் ஆண்டு உலக கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தலைசிறந்த வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். உலக கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஜேக் காலிஸ், பிளிண்டாஃப், சனத் ஜெயசூர்யா, கபில்தேவ், ரவி சாஸ்திரி முதலிய ஜாம்பவான் வீரர்கள் வரிசையில் ஷாகிப் அல் ஹசன் என்ற பெயரும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.
கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டராக உச்சம் தொட்ட ஷாகிப் அல்ஹசன், தற்போது நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று தன்னை ஒரு அரசியல் தலைவராகவும் நிலைநிறுத்தியுள்ளார்.
உலக கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஜேக் காலிஸ், பிளிண்டாஃப், சனத் ஜெயசூர்யா, கபில்தேவ், ரவி சாஸ்திரி முதலிய ஜாம்பவான் வீரர்கள் வரிசையில் ஷாகிப் அல் ஹசன் என்ற பெயரும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.
இதுவரை 121 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஷாகிப் அல் ஹசன், 4454 ரன்கள் மற்றும் 233 விக்கெட்டுகளுடன் 2 முறை 10 விக்கெட்டுகளையும், 19 முறை 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இரட்டை சதத்துடன், 5 சதங்கள், 31 அரைசதங்களையும் பதிவுசெய்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரையில், 234 இன்னிங்ஸ்களில் 7570 ரன்களை குவித்திருக்கும் அவர், 9 சதங்களையும், 56 அரைசதங்களையும் அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமகால கிரிக்கெட்டர்களில் 300 ஒருநாள் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரேயொரு வீரர் ஷாகிப் அல்ஹசன் தான். 4 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் ஷாகிப், 317 ஒருநாள் விக்கெட்டுகளை பதிவுசெய்துள்ளார்.
சமீபத்தில் பல மாதமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்துவரும் ஷாகிப் அல் ஹசன், தற்போதும் உலக கிரிக்கெட் வீரர்கள் தரவரிசையின் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஒருநாள் மற்றும் டி20-ல் முதலிடத்தையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது இடத்தையும் பிடித்து முன்னிலை வகித்துவருகிறார்.
நடந்து முடிந்த உலகக்கோப்பையில் கண்ணில் ஏற்பட்ட பிரச்னையால் பாதியிலிருந்து வெளியேறிய ஷாகிப் அல் ஹசன், தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறமால் அரசியலில் குதித்த இரண்டாவது வங்கதேச வீரர் இவராகவும். ஏற்கனவே முன்னாள் வங்கதேச கேப்டன் மொர்டஷா அரசியலில் குதித்த நிலையில், தற்போதைய வங்கதேச கேப்டனான ஷாகிப் அல் ஹசனும் ஆளுங்கட்சி தரப்பில் அரசியலில் இரங்கியுள்ளார்.
வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி சார்பில், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் போட்டியிட்டார். தன்னுடைய சொந்த தொகுதியான மகுராவில் போட் சின்னத்தில் நின்ற அவர், எதிர்த்து நின்றவரை சுமார் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமான வெற்றியை பதிவுசெய்துள்ளார்.
இதன்மூலம் விரைவில் எம்பியாக பொறுப்பேற்பார் என்று தெரிகிறது. ஏற்கனவே முன்னாள் வீரர் மொர்டஷா எம்பியாக பதவி வகித்த நிலையில், வங்கதேசத்தின் கிரிக்கெட் வீரர்களில் எம்பியான இரண்டாவது வீரராக ஷாகிப் அல் ஹசன் மாறியுள்ளார். இன்னும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறாத நிலையில், ஓய்வை குறித்து ஷாகிப் அல் ஹசனே முடிவுசெய்வார் என்று தெரிகிறது.
*ஒருநாள் போட்டிகளில் 300 விக்கெட்டுகள்: ஒருநாள் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வங்கதேச பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஷகிப் அல் ஹசன் பெற்றுள்ளார்.
இதுவரை 13 வீரர்கள் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டி இருக்கும் நிலையில், முரளிதரன், வாசிம் அக்ரம், கமிண்டா வாஸ், அனில் கும்ப்ளே, மெக்ராத், பிரட் லீ, லசித் மலிங்கா வரிசையில் 14ஆவது வீரராக மாறி சாதனை படைத்துள்ளார் ஷகிப் அல் ஹசன்.
*300 விக்கெட்டுகள் + 6000 ரன்கள் : சனத் ஜெயசூர்யா மற்றும் ஷாகித் அப்ரிடிக்கு பிறகு, ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்களுக்கு மேல் எடுத்த மற்றும் 300-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த மூன்றாவது ஆல்ரவுண்டர் ஷாகிப்.
*3ஆவது இடதுகை பவுலர்: டேனியல் வெட்டோரி மற்றும் ஜெயசூர்யாவுக்குப் பிறகு 300 விக்கெட்டுகள் என்ற இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷாகிப் அல் ஹசன்.
*சமகால கிரிக்கெட்டர்களில் 6 வருடங்களில் முதல் வீரர்: சமகால கிரிக்கெட்டர்களில் கடந்த 6 வருடங்களில் ஒருநாள் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் என்ற சாதனையை எட்டும் முதல் வீரராக ஷாகிப் அல் ஹசன் சாதனையை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் மிட்சல் ஸ்டார்க் மட்டும் தான் 227 விக்கெட்டுகளுடன் இவருக்கு பிந்தைய, தற்கால கிரிக்கெட்டராக இருந்து வருகிறார்.
*டி20 கிரிக்கெட்டில் 2வது வீரர்: தற்போது டி20 வடிவங்களில் மொத்தமாக 443 விக்கெட்டுகளுடன், 6000 ரன்கள் எடுத்தவர் மற்றும் 50 கேட்சுகளை எடுத்த இரண்டே வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் ஷாகிப்.