ஷாகிப் அல் ஹசன் x
கிரிக்கெட்

’பேட்ஸ்மேன் ரெடியாகவில்லை..’ கோவத்தில் முகத்திற்கு நேராக பந்தை எறிந்த ஷாகிப்! ஷாக்கிங் வீடியோ!

Rishan Vengai

ஷாகிப் அல் ஹசன் எப்போதும் ஆக்ரோசமான அணுகுமுறைக்கு பெயர் போனவர், பலமுறை வீரர்களுக்கு எதிராகவும், அம்பயர்களுக்கு எதிராகவும் அவர் செய்யும் மோசமான செயல்பாடுகள் இணையத்தில் வைரலாக பேசப்படும்.

shakib al hasan

2021-ம் ஆண்டு நடந்த டாக்கா பிரீமியர் லீக் (டிபிஎல்) போட்டியின்போது நடுவரின் முடிவில் அதிருப்தியடைந்த அவர் கால்களால் ஸ்டம்பை உதைத்தது மட்டுமில்லாமல், ஸ்டம்புகளை புடிங்கி பிட்ச்சில் அடித்ததும் அப்போது கடுமையான விமர்சனங்களை பெற்றுத்தந்தது.

அதனைத்தொடர்ந்து 2023-ம் ஆண்டு வங்கதேச பிரீமியர் லீக் டி20 போட்டியில் அம்பயர் ஒய்டு கொடுக்காததால் ‘ஹேய், ஹேய்’ என கத்திக்கொண்டு சண்டைக்கு சென்றதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்டது.

இதையும் படிக்க: இமானே கெலிஃப் பாலின விவகாரம்| ‘உசைன் போல்ட்டை ஏன் தடைசெய்யவில்லை?’ நடிகை டாப்ஸி கேள்வி!

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்துவீசும்போது, பேட்டிங் செய்த முகமது ரிஸ்வான் சரியான நேரத்தில் ரெடியாகாததால் கோவத்தில் முகத்திற்கு நேராக பந்தை எறிந்த சம்பவம் நடந்துள்ளது.

ரிஸ்வான் முகத்திற்கு நேராக எறிந்த ஷாகிப்!

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 21-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேச அணி. முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய வங்கதேச அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையையும் தன்வசப்படுத்தியது.

இந்த வரலாற்று வெற்றியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி மிகப்பெரிய பங்காற்றிய ஷாகிப் அல் ஹசன், அவருடைய ஆக்ரோசமான அணுகுமுறையால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

இதையும் படிக்க: ரோகித்தை தொடர்ந்து MI-க்கு குட்பை சொல்லும் சூர்யகுமார்? கேப்டன்சி ஆஃபர் கொடுத்த KKR! வெளியான தகவல்!

இணையத்தில் வைரலாகும் வீடியோவில், 33வது ஓவரின் 2வது பந்தை வீச ஷாகிப் அல் ஹசன் தயாராக இருந்தபோது, பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் ரெடியாகாததால் கோவத்தில் பந்தை முகத்திற்கு நேராக எறிந்தார். உடன் அடுத்த பந்தை சரியாக வீசாததால் கோவத்தில் தனக்குத்தானே கத்திக்கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.