ruturaj twitter
கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்கள்! கே.எல் ராகுலை பின்னுக்கு தள்ளி கெய்க்வாட் சாதனை!

Rishan Vengai

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவரும் ருதுராஜ் ஹெய்க்வாட், நடந்துமுடிந்த 4 டி20 போட்டிகளிலும் 0, 58, 123, 32 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். 4வது டி20 போட்டியில் 32 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 போட்டிகளில் ஒரு இமாலய சாதனையை படைத்து அசத்தியுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.

அதிவேகமாக 4000 டி20 ரன்களை கடந்து சாதனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 57 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் விளாசிய ருதுராஜ் கெய்க்வாட் டி20 சர்வதேச போட்டியில் தனது முதல் சதத்தை பதிவுசெய்தார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டி20 சர்வதேச சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் இதன்மூலம் படைத்தார். அதுமட்டுமல்லாமல் 123 ரன்கள் குவித்த ருதுராஜ், டி20யில் அதிகபட்சரன்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

ruturaj

சர்வதேச டி20 போட்டியில் 9-வது இந்திய வீரராக சதம் விளாசிய ருதுராஜ், தற்போது அதிவேகமாக 4000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகள், முதல்தர போட்டிகள், லிஸ்ட் ஏ போட்டிகள் என அனைத்துவிதமான டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் ருதுராஜ் 117 இன்னிங்ஸ்களில் 4000 ரன்களை கடந்து, குறைந்த போட்டிகளில் இச்சாதனையை படைத்த முதல் இந்திய வீரராக மாறியுள்ளார். இதற்கு முன் 116 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்திருந்த கேஎல் ராகுலை பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளார் ருதுராஜ்.

ruturaj

மேலும் அதிவேகமாக 4000 டி20 ரன்களை கடந்த சர்வதேச வீரர்கள் பட்டியலில், க்றிஸ் கெயில் (107 இன்னிங்ஸ்கள்), ஷான் மார்ஸ் (113 இன்னிங்ஸ்கள்), பாபர் அசாம் (115 இன்னிங்ஸ்கள்) முதலிய 3 வீரர்களுக்கு பிறகு 4-வது சர்வதேச வீரராக மாறியுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.