shubman gill PTI
கிரிக்கெட்

”பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 99% சுப்மன் கில் இருப்பார்” - ரோகித் சர்மா சொன்ன இனிப்பு தகவல்

டெங்கு பாசிட்டிவால் முதலிரண்டு உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடாமல் இருந்துவந்த இந்திய இளம் வீரர் சுப்மன் கில், பாகிஸ்தானுக்கு எதிரான நாளையப் போட்டிக்கு திரும்புவார் என இந்திய கேப்டன் தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

2023 ஒருநாள் உலகக்கோப்பையின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடுவதற்கு இந்திய அணி சென்னை வந்தபோது, இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுப்மன் கில்லுக்கு டெங்கு உறுதிசெய்யப்பட்டது. பின்னர் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுப்மன் கில், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலிரண்டு போட்டியை தவறவிட்டார்.

ind vs aus

சிறப்பான ஃபார்மில் இருந்துவரும் சுப்மன் கில் இந்திய அணியில் இல்லாதது பெரிய பின்னடைவாகவே இருந்து வந்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் கூட ஒருவேளை கில் இடம்பெற்றிருந்தால், இந்திய அணி 3 டாப் ஆர்டர் விக்கெட்டுகளை 0 ரன்னில் விட்டுக்கொடுத்திருக்காது. இந்நிலையில் அடுத்த போட்டியிலாவது கில் விளையாடுவாரா என்ற குழப்பம் நீடித்துவந்த நிலையில், இந்திய கேப்டன் கில் கம்பேக்கை உறுதிசெய்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக 99% கில் விளையாடுவார்!- ரோகித் சர்மா

இதற்கிடையில் சென்னை மருத்துவமனையில் இருந்து குணம்பெற்று வெளியேறிய சுப்மன் கில் இந்திய அணியுடன் இணைந்து தொடர் வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாகவே கில் மருத்துவமனையில் இருந்து வெளியேறினாலும், பிசிசிஐ அவரை அணிக்குள் இணைப்பதை நிறுத்திவைத்தது. தொடர்ந்து தன்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்திய கில், அகமதாபாத் மைதானத்திற்கு சென்று ஆறு நெட் பவுலர்களுக்கு எதிராக தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.

Gill

இந்நிலையில் போட்டிக்கு முன்னதான செய்தியாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் சுப்மன் கில்லின் நிலை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்திருக்கும் ரோகித், “இந்தியா-பாகிஸ்தான் மோதலில் 99% சுப்மன் கில் இடம்பெற வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார்.