ரோகித் சர்மா  web
கிரிக்கெட்

"டிரென்ட் போல்ட் இல்லை.. அவர் தான் என்னை அதிகம் பயமுறுத்தினார்! 100 முறை பார்ப்பேன்!" - ரோகித் சர்மா

Rishan Vengai

ஒரு நாள் கிரிக்கெட்டில் 264, 209, 208 என மூன்று முறை இரட்டை சதங்களை விளாசியவரும், ODI, டெஸ்ட், டி20 மூன்றுவடிவ கிரிக்கெட்டிலும் 20,000 ரன்களுக்கு மேல் அடித்தவருமான இந்திய கேப்டன் ரோகித் சர்மா சிறந்த வீரர்களில் ஒருவராக ஜொலித்துவருகிறார்.

rohit sharma

தன்னுடைய அதிரடியான பேட்டிங்கின் மூலம் பலபவுலர்களுக்கு நைட்மேராக விளங்கிய ரோகித் சர்மா, தன்னுடைய பலவீனங்களை ஒப்புக்கொள்வதில் எப்போதும் தயங்கியதில்லை. அந்தவகையில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொள்ள கடினமான பவுலர் யார் என்பது குறித்தும், அவருக்கு எதிராக விளையாட 100 முறை அவரின் பந்துவீச்சை பார்த்து சென்றிருக்கிறேன் என ஓப்பனாக பேசியுள்ளார்.

100 முறை அவரின் வீடியோவை பார்த்து சென்றிருக்கிறேன்!

பொதுவாக அதிவேகத்தில் இன்-ஸ்விங் செய்யக்கூடிய இடதுகை பவுலர்கள் ரோகித் சர்மாவை திணறடித்துள்ளனர். சமீபகாலமாக நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட், ரோகித் சர்மாவிற்கு எதிராக சிறப்பாக செயல்படும் நிலையிலும், இந்திய கேப்டன் எதிர்கொள்ள கடினமான பவுலராக போல்ட்டின் பெயரை குறிப்பிடவில்லை.

rohit sharma - dale steyn

மாறாக தென்னாப்பிரிக்கா அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்னின் பெயரை எதிர்கொள்ள கடினமான ஒரு வீரர் என்றும், அவரின் வீடியோவை 100 முறை பார்த்த பிறகு தான் எதிர்த்து விளையாட செல்வேன் என்றும் பெருமையாக கூறியுள்ளார்.

ஸ்டெய்ன் குறித்து பேசியிருக்கும் ரோகித் சர்மா, ”நான் டேல் ஸ்டெய்னை எதிர்கொள்ள செல்வதற்கு முன், அவருடைய வீடியோக்களை 100 முறை பார்ப்பேன். அவர் ஒரு ஜாம்பவான் பந்துவீச்சாளர், 140+ வேகத்தில் பந்தை ஸ்விங் செய்யக்கூடியவர். அது அவ்வளவு சுலபமானது அல்ல. தற்போது அவர் அடைந்திருக்கும் உயரத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு எதிராக நான் அந்தளவு சிறப்பாக செயல்பட்டது இல்லை, ஆனால் எங்களுடைய மோதலை அதிகம் ரசித்துள்ளேன்” என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

ரோகித் சர்மா தான் கடினமான பேட்டர்! - டேல் ஸ்டெய்ன்

ரோகித் சர்மா தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்னை புகழ்ந்து கூறுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பும், “நான் எதிர்கொள்ள சிரமப்பட்ட கடினமான பவுலர் என்றால் அது டேல் ஸ்டெய்ன் தான். அவர் ஒருபோதும் எளிதான லெந்த்களை வீசியதே இல்லை, அதிகவேகத்தில் ஸ்விங் செய்து ஆதிக்கம் செலுத்துவார். 140 வேகத்தில் ஸ்விங் செய்யக்கூடியவர்கள் அரிதாகவே இருக்கின்றனர்” என்று புகழ்ந்து பேசியிருந்தார்.

அதேபோல டேல் ஸ்டெய்னும் ரோகித் சர்மா மீதான மரியாதையை வெளிப்படுத்தும் வகையில், “நான் ஒருவருக்கு எதிராக பந்துவீசும் போது அதிக சிரமத்திற்கு ஆளாகியுள்ளேன், அது ரோகித் சர்மா. அவர் ஓப்பனிங்கில் இறங்கி சிறப்பாக விளையாடக்கூடியவர்” என்று புகழ்ந்து பேசியிருந்தார்.