ரிக்கி பாண்டிங் முகநூல்
கிரிக்கெட்

“நான் சதமடிக்க உதவிய ஒவ்வொரு பேட்டிலும்...” - ரிக்கி பாண்டிங் எமோஷனல்!

சர்வதேசப் போட்டிகளில் தான் 100 ரன்களை கடக்க உதவிய மட்டைகளை அரும்பொருள்கள் போல பாதுகாத்து வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

PT WEB

சர்வதேசப் போட்டிகளில் தான் 100 ரன்களை கடக்க உதவிய கிரிக்கெட் மட்டைகளை (Bats) அரும்பொருள்கள் போல பாதுகாத்து வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாடத் தேவையான உபகரணங்களை வழங்கிய அவர், அவர்கள் மத்தியில் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், “சர்வதேசப் போட்டிகளில் 71 சதங்களை அடிக்கப் பயன்படுத்திய மட்டைகளை எனது வீட்டில் நான் பாதுகாப்பாக வைத்துள்ளேன். அம்மட்டைகளின் வாயிலாக நான் எடுத்த ரன்கள் மற்றும் எந்த அணிக்கு எதிராக விளையாடினேன் என்பது உள்ளிட்ட விவரங்களையும் எழுதி வைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவிற்கு எதிராக 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 140 ரன்களைக் குவித்து கோப்பை வெல்லக் காரணமாக இருந்த பாண்டிங், அப்போட்டியில் பயன்படுத்திய மட்டையையும் தனது பாதுகாப்பில் வைத்துள்ளதை பெருமிதமாகக் குறிப்பிட்டார்.