rohit - kohli web
கிரிக்கெட்

உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்கு திரும்பும் ’கோலி, ரோகித், அஸ்வின்’? கம்பீர் எடுத்த முடிவு என்ன?

Rishan Vengai

இலங்கைக்கு எதிரான ஏமாற்றமளிக்கும் ODI தொடருக்குப் பிறகு, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி கடினமான டெஸ்ட் அட்டவணைக்குத் தயாராகிறது. புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற கவுதம் கம்பீர், அவரின் தலைமையிலான முதல் ஒருநாள் தொடரை 0-2 என இலங்கையிடம் இழந்ததற்கு பிறகு எதிர்வரும் டெஸ்ட் தொடர்களை வெல்ல வேண்டும் என்ற பெரிய முயற்சியில் இறங்கியுள்ளார்.

விராட் கோலி - ரோகித் சர்மா - பும்ரா

அதன்படி உள்நாட்டு சிவப்பு-பந்து கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை ஆழமாக வெளிப்படுத்தி இருக்கும் கவுதம் கம்பீர், இந்தியாவிற்கான சர்வதேச டெஸ்ட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு உள்நாட்டு தொடரான துலீப் டிராபியில் அனைத்து இந்திய வீரர்களும் பங்குபெற்று விளையாடுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

2024-ல் இந்தியா விளையாடவிருக்கும் டெஸ்ட் தொடர்கள்:

* இந்தியா vs வங்கதேசம் - 2 டெஸ்ட் போட்டிகள் - செப்டம்பர் 19 - அக். 01

* இந்தியா vs நியூசிலாந்து - 3 டெஸ்ட் போட்டிகள் - அக். 16 - நவம்பர் 05

* ஆஸ்திரேலியா vs இந்தியா - 5 டெஸ்ட் போட்டிகள் - நவம்பர் 22 - ஜனவரி 07

10 கடினமான டெஸ்ட் போட்டிகளுக்கு விரைந்து தயாராகும் வகையில் உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலீப் டிராபியில், விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், பும்ரா, அஸ்வின், ரவிந்தீர ஜடேஜா, அஸ்வின், சுப்மன் கில், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் போன்ற மூத்த வீரர்கள் அடங்கிய அனைத்து வீரர்களையும் பார்க்க கம்பீர் ஆர்வமாக இருப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்கு திரும்பும் கோலி-ரோகித்!

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த செய்தியின் படி, இந்தியாவின் நட்சத்திர வீரர்களான சுப்மன் கில், கே.எல்.ராகுல், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் முதலிய வீரர்கள் துலீப் டிராபியில் விளையாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மட்டும் விதிவிலக்கு பெற்றுள்ளார். பணிச்சுமை காரணமாக அவருக்கு நீண்ட இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிசிசிஐ துலீப் டிராபி தொடருக்கான அணி ஸ்குவாட்களை அறிவிக்கும் போது, அந்த பட்டியலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இரண்டு மூத்த வீரர்களும் இடம்பிடிப்பார்கள். இஷான் கிஷனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மூத்த நட்சத்திரங்களான அஜிங்க்யா ரஹானே மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோருக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

அஸ்வின்

இந்நிலையில் கிறிக்இன்ஃபோ வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா மற்றும் அஸ்வின் முதலிய மூத்த வீரர்கள் துலீப் டிரோபியில் தவறவிடுவார்கள் எனவும், முகமது ஷமி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் முதலிய வீரர்களுக்கு கம்பேக் கொடுக்கும்படியான வாய்ப்பாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் துலீப் டிரோபியில் பங்கேற்கலாமா வேண்டாமா என்னும் விருப்பம் விராட் மற்றும் ரோகித்தின் கையிலேயே விடப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை கூறப்படுகிறது.

இதையும் படிக்க: உலக வரைபடத்தில் சிறிய நாடு! இழப்புகளின் வலிகளை சுமந்து தங்கம் வென்று வரலாறுபடைத்த 23 வயது வீராங்கனை!

வெளியாகியிருக்கும் செய்திகளின் படி,

* செப்டம்பர் 5-ம் தேதி முதல் தொடங்கவிருக்கும் துலீப் டிராபியில் பிசிசியின் மைய ஒப்பந்தத்தில் இருக்கும் அனைத்து வீரர்களும் இடம்பெற உள்ளனர்.

* துலீப் டிரோபிகளுக்கான அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு இந்த மாத இறுதியில் வெளியிடும்.

* ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, அஸ்வின் முதலிய மூத்தவீரர்கள் விளையாட மாட்டார்கள் எனவும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி பங்கேற்க வேண்டுமா என்ற முடிவை அவர்களே எடுப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஷமி

* காயத்திலிருந்து வெளிவந்து என்சிஏ-ல் பயிற்சிபெற்று வரும் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படவிருக்கிறது.

* காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிட்ட கே.எல் ராகுல், மற்றும் கார் விபத்திலிருந்து மீண்டுவந்திருக்கும் ரிஷப் பண்ட் எப்படி செயல்பட போகின்றனர் என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

* சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் நான்கு அணிகளிலும் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய சில சிறப்பு பேட்டர்களாக இருக்க உள்ளனர்.

* 5 உள்நாட்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 வெளிநாட்டு போட்டிகள் என 10 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடவிருக்கிறது.

* 10 டெஸ்ட் போட்டிகளும் சிறந்த அணியை அனுப்பும் நோக்கில் உள்நாட்டு தொடர்களில் வீரர்கள் விளையாடவிருப்பதாக அறிக்கை கூறுகிறது.

ஒருவேளை விராட் கோலி துலீப் டிரோபியில் விளையாடும் பட்சத்தில் 12 வருடத்திற்கு பிறகு உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாடுவார். என்ன முடிவை பிசிசிஐ எடுக்கப்போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.