csk vs rcb cricinfo
கிரிக்கெட்

‘அடேங்கப்பா இத்தனை கோடி லாபமா..?’ 2024 நிதியாண்டில் சென்னை சூப்பர் கிங்ஸின் நிகர லாபம் 340% உயர்வு?

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட்டின் ஒட்டுமொத்த வருவாய் 131% அதிகரித்து ரூ.676.40 கோடியாக மாறியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது முந்தைய நிதியாண்டில் ரூ.292.34 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Rishan Vengai

இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரில் அதிக செல்வாக்குடன் இருக்கும் அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 12 முறை பிளேஆஃப் சுற்றுகளுக்கு தகுதிபெற்று 10 முறை இறுதிப்போட்டியில் விளையாடி 5 முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சமனுடன் இருக்கிறது.

ChennaiSuperKings

3 ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டனான தோனியை தங்கள் அணியில் கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. தோனி என்ற ஒற்றை மனிதருக்காகவும், சிஎஸ்கே அணிக்காகவும் ஒவ்வொரு ஐபிஎல் தொடரின்போதும் நகரம் விட்டு நகரம் சென்று சிஎஸ்கே ரசிகர்கள் தோனியையும் சிஎஸ்கே அணியையும் கொண்டாடி வருகின்றனர்.

Dhoni - BCCI

இதனால் தோனியை வைத்து ஐபிஎல் தொடரில் நிகர லாபம் ஈட்டும் வேலையை பிசிசிஐ-ம் தொடர்ந்து செய்துவருகிறது. அதன் நீட்சியாகவே நடக்கவிருக்கும் 2025 ஐபிஎல் தொடரிலும் தோனியை அன்கேப்டு வீரராக தக்கவைக்கும் ஒரு விதிமுறையை பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.

இதற்கிடையில் சிஎஸ்கே அணிக்கான பிசிசிஐயின் மைய உரிமைகள் மற்றும் டிக்கெட் விற்பனை அதிகரித்ததன் காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட்டின் வருவாயானது கடந்த ஆண்டு நிதியாண்டில் இருந்ததை விட 131% வருவாய் அதிகரித்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ரூ.52 கோடியாக இருந்த லாபம் தற்போது ரூ.229 கோடி..

இந்தியா டுடே வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி, சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெடின் (CSKCL) 2023-2024 வருவாயானது மார்ச் 2024-ல் முடிவடைந்த நிதியாண்டின் படி லாபம் மட்டும் 340% அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது, முந்தைய நிதியாண்டில் (2022-2023) ரூ. 52 கோடியாக இருந்த லாபமானது நடப்பாண்டில் (2023-2024) ரூ.229.20 கோடியாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

chennai super kings

அதாவது கடந்த நிதியாண்டில் ரூ.292.34 கோடியாக இருந்த வருவாயானது, 2023-2024 நிதியாண்டில் ரூ.676.40 கோடியாக உயர்ந்திருப்பதாகவும், இது முந்தைய ஆண்டை விட 131% அதிகம் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

kasi Viswanathan-MS Dhoni

CSKCL-ன் நிர்வாக இயக்குனராகத் தொடர்ந்துவரும் கே.எஸ். விஸ்வநாதன், போர்டு தீர்மானத்தைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்டம்பர் 27-ம் தேதி திட்டமிடப்பட்டிருக்கும் நிறுவனத்தின் 10வது ஆண்டு பொதுக் கூட்டத்திற்கு (AGM) தலைமை தாங்குவார். அவரது தலைமையில், CSK அணி ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான உரிமையாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.