pat cummins - rishabh pant web
கிரிக்கெட்

”எங்க கிட்ட டிராவிஸ் ஹெட் இருக்கார்; ஆனால் அனைத்துக்கும் விதை போட்டவர் ரிஷப் பண்ட்”!- பாட் கம்மின்ஸ்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்பட்டிருக்கும் நவீனகால அதிரடியான அணுகுமுறைக்கு விதைபோட்டவர் ரிஷப் பண்ட் தான் என்று ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரானது 5 போட்டிகளாக நடத்தப்பட உள்ள நிலையில், அதன்மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள ரோகித் தலைமையிலான இந்திய அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவிருக்கிறது.

rishabh pant gabba test

கடந்த 10 ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த 2 பார்டர் கவாஸ்கர் தொடரையும் வென்றுள்ள இந்திய அணி, மூன்றாவது முறையும் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில் களம்காண உள்ளது. ஆனால் சொந்த மண்ணில் இன்னொரு டெஸ்ட் தொடரை இழக்கு ஆஸ்திரேலியா அணி தயாராக இல்லை.

ind vs aus

இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ், நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் ஏற்படுத்திய தாக்கம் குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவரை அமைதியாக வைத்திருப்பதே எங்கள் முதல் வேலை..

டி20 கிரிக்கெட்டின் தாக்கம் தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த காலத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். பிறகு சனத் ஜெயசூர்யா அதை கையில் எடுத்தார். அதற்குப் பிறகு இந்திய அணியின் வீரேந்திர சேவாக் அதிரடி வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இருந்தார். இவர்களை தொடர்ந்து பிரண்டன் மெக்கலம் வந்தார்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் எதிர்பார்க்காத மாடர்ன் கிரிக்கெட் ஷாட்களையும் ஆடக்கூடியவராக முதன் முதலில் வெளிப்பட்டவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். அவர் அச்சமற்ற முறையில் விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறைக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக அணுகும் முறைக்கு பிள்ளையார் சுழி போட்டவராக ரிஷப் பண்ட் இருக்கிறார்.

இதையும் படிக்க: ’இனி அவர் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான்..’ சதமடித்து உலகத்தின் கூற்றை மாற்றிய ரிஷப் பண்ட்!

rishabh pant

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் பாட் கம்மின்ஸ், “ஒவ்வொரு அணியிலும் விளையாட்டை தங்களுக்கு சாதகமாக மாற்றக்கூடிய ஒன்று அல்லது இரண்டு அதிரடியான வீரர்கள் இருக்கிறார்கள். உங்களுக்குத் தெரியும், எங்களிடம் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்ச் மார்ஷ் என்ற இரண்டு அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் எப்போதும் ஆக்ரோஷமான கிரிக்கெட்டையே விளையாடப்போகிறார்கள், பவுலராக உங்கள் ஏரியாவை நீங்கள் கொஞ்சம் தவறவிட்டால், அவர்கள் உங்களை டாமினேட் செய்வார்கள்” என்று பாட் கம்மின்ஸ் கூறினார்.

இதையும் படிக்க: ”அது 7 சிக்சர்களாக இருந்திருக்க வேண்டும்..” - 17 ஆண்டுக்கு பின் பிராட் வெளிப்படுத்திய உண்மை!

pant

அதேநேரம் நவீனகால அதிரடி டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட்டின் தாக்கம் குறித்து பேசிய அவர், “ஹெட் மற்றும் மார்ஸ் இருவரும் ரிஷப் பண்ட்டை போல ஏதாவது ரிவர்ஸ் லேப் ஷாட் கூட ஆடலாம். அது ஒரு நம்பமுடியாத ஷாட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அப்படியான ஷாட்கள் உருவானதில் ரிஷப் பண்ட்டின் பங்கு அதிகமாக இருக்கிறது என நினைக்கிறேன்.

தற்போது அப்படியான அபத்தமான ஷாட்கள் எல்லாம் அதிகாமகிவிட்டதற்கு நாம் பழக்கமாகிவிட்டோம், கடந்த இரண்டு தொடர்களில் எங்களுக்கு எதிராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் ரிஷப் பண்ட், வரும் தொடரில் அவரை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்வோம்” என்று மேலும் கூறினார்.