நவ்தீப் சிங் - தோனி - கோலி web
கிரிக்கெட்

தோனியா? அல்லது கோலியா? 2 பேரையும் தவிர்த்து மற்றொரு வீரரை தேர்வுசெய்த பாராலிம்பிக் கோல்டு மெடலிஸ்ட்!

பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவரான இந்திய ஈட்டி எறிதல் வீரர் நவ்தீப் சிங், தன்னுடைய விருப்பமான கிரிக்கெட் வீரருக்கான தேர்வில் தோனி மற்றும் கோலி இருவரது பெயரையும் தவிர்த்தார்.

Rishan Vengai

பாரிஸ் பாராலிம்பிக் ஆடவர் ஈட்டி ஏறிதல் எஃப் 41 பிரிவில் இந்தியாவின் நவ்தீப் சிங், 47.32 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். முதலிடம் பிடித்த ஈரானை சேர்ந்த பெய்ட் சயாஹ் (BAIT SAYAH), தனது தேசியக் கொடிக்கு பதிலாக வேறு கொடியை காட்டியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் காரணமாக நவதீப் முதலிடத்திற்கு முன்னேறி தங்கப்பதக்கத்தை வென்றவராக அறிவிக்கப்பட்டார்.

இதன் மூலம் பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது. பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இது 7-வது தங்கமாக பதிவுசெய்யப்பட்டது. மொத்தமாக 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலத்துடன் 29 பதக்கங்களை வென்ற இந்தியா 18வது இடத்தை தக்கவைத்தது.

நவ்தீப்

இந்நிலையில் பாரிஸ் பாராலிம்பிக்ஸ் தங்கப் பதக்கம் வென்ற நவ்தீப் சிங், களத்தில் ஆக்ரோஷம் மற்றும் போட்டித்தன்மையை வெளிப்படுத்தியதற்காக இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது கூட, நவ்தீப் சிங்கிடம் ஆக்ரோஷமான கொண்டாட்டம் குறித்து கேட்கப்பட்டது.

நவ்தீப்

இந்நிலையில் சமீபத்தில் பங்கேற்ற நவ்தீப் சிங்கிடம், விருப்பமான இந்திய கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டு, தேர்வாக தோனி அல்லது விராட் கோலியின் பெயர்கள் குறிப்பிடப்பட்டது. ஆனால் அவர் இரண்டு பேரையும் தவிர்த்து ரோகித் சர்மாவின் பெயரை குறிப்பிட்டார்.

தோனியா? அல்லது கோலியா?

23 வயதில் உலக அரங்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நவ்தீப் சிங், பிரதமர் மோடி உட்பட பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டார்.

தோனி - கோலி

இந்நிலையில் சமீபத்தில் போட்காஸ்ட் ஒன்றில் கலந்துகொண்ட நவ்தீப் சிங்கிடம், உங்களுக்கு விருப்பமான இந்திய கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அவரிடம் வைக்கப்பட்ட இரண்டில் ஒரு தேர்வில் கோலி அல்லது தோனியின் பெயர்கள் குறிப்பிடப்பட்டன. ஆனால் இருவரையும் விடுத்து அவர் ரோகித் சர்மாவின் பெயரை தேர்ந்தெடுத்தார்.

நவ்தீப்

ரோகித் சர்மாவின் பெயரை தேர்ந்தெடுத்து பேசிய அவர், “ரோகித் சர்மா மிகவும் நன்றாக விளையாடுகிறார். இரட்டை சதம் அடித்திருந்தார். என்ன ஒரு இன்னிங்ஸ் அது! அப்போதிலிருந்து நான் அவருடைய ரசிகனாக மாறிவிட்டேன்" என்று சுபங்கர் மிஸ்ராவின் போட்காஸ்டில் பேசும்போது நவ்தீப் கூறினார்.