PAK v BAN  twitter
கிரிக்கெட்

PAK v BAN | அரையிறுதி வாய்ப்பில் நீடிக்குமா பாகிஸ்தான்? வங்கதேச அணிக்கு எதிராக முக்கிய மோதல்!

பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பையில் இன்னும் நீடிக்க முடியும். ஆனால் அதற்கான சரியான மனநிலையில் அந்த அணி இருக்கிறதா என்று தெரியவில்லை.

Viyan

போட்டி 31: வங்கதேசம் vs பாகிஸ்தான்

மைதானம்: ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா

போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 31, மதியம் 2 மணி.

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

வங்கதேசம்

போட்டிகள் - 6, வெற்றி - 1, தோல்விகள் - 5, புள்ளிகள் - 2

புள்ளிப் பட்டியலில் இடம்: ஒன்பதாவது

சிறந்த பேட்ஸ்மேன்: மஹ்மதுல்லா - 218 ரன்கள்

சிறந்த பௌலர்: ஷொரிஃபுல் இஸ்லாம் - 8 விக்கெட்டுகள்

Bangaladesh

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்று இந்த உலகக் கோப்பையைத் தொடங்கிய வங்கதேசம், அதன்பிறகு தோல்வி மேல் தோல்விகளை சந்தித்து வருகிறது. இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து என தொடர்ந்து 5 தோல்விகளைச் சந்தித்திருக்கிறது அந்த அணி. ஒவ்வொரு தோல்விகளும் பெரிதாகவே அமைய ரன்ரேட்டும் -1.338 என அடி வாங்கியிருக்கிறது.

பாகிஸ்தான்

போட்டிகள் - 6, வெற்றிகள் - 2, தோல்விகள் - 4, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 4

புள்ளிப் பட்டியலில் இடம்: ஏழாவது

சிறந்த பேட்ஸ்மேன்: முகமது ரிஸ்வான் - 333 ரன்கள்

சிறந்த பௌலர்: ஷஹீன் அஃப்ரிடி - 13 விக்கெட்டுகள்

Pakistan

இரு போட்டிகளில் இரு வெற்றிகளோடு சிறப்பாக உலகக் கோப்பையைத் தொடங்கியது பாகிஸ்தான். ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வி, அவர்கள் தொடரைப் புரட்டிப் போட்டது. அதன்பிறகு ஆஸ்திரேலியாவிடம் தோற்றது அந்த அணி. அடுத்து யாரும் எதிர்பாராத வகையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அதிர்ச்சித் தோல்வி. கடைசிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடவும் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி. இப்படி தொடர்ந்து 4 தோல்விகள் அடைய ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது பாகிஸ்தான்.

மைதானம் எப்படி?

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில்தான் வங்கதேச அணி முந்தைய போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்டது. அந்த ஆட்டம் பௌலர்களுக்கு சாதகமாக இருந்தது. மொத்தமே அந்தப் போட்டியில் 371 ரன்களே எடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆட்டம் அந்த ஆடுகளத்தில்தான் ஆடப்படுமா இல்லை வேறொரு ஆடுகளத்தில் ஆடப்படுமா தெரியவில்லை. ஆடுகளம் எப்படி இருந்தாலும், முந்தைய போட்டியைப் போல் மைதானம் பெருமளவு வங்கதேச அணிக்கு சாதகமாக இருக்கும்.

Mohamed rizwan

சாம்பியன்ஸ் டிராபி இடத்தையாவது உறுதி செய்யுமா வங்கதேசம்?

வங்கதேச அணியின் உலகக் கோப்பை மிக மோசமாக அமைந்துவிட்டது. இதற்கு மேல் அந்த அணியால் அரையிறுதி வாய்ப்பை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அதேசமயம் 2025 சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பு இன்னும் அந்த அணியின் கையில்தான் இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் டாப் 8 இடங்களுக்குள் முடிக்கும் அணிகள்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறும் என்று ஐசிசி அறிவித்திருக்கிறது. அப்படியிருக்கும்போது, வங்கதேசம் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சிக்கவேண்டும். அதற்கு அவர்களின் பேட்டிங், பௌலிங் அனைத்தும் கைகொடுக்கவேண்டும். கேப்டன் ஷகிப் அல் ஹசன் உள்பட அந்த அணியின் எந்த வீரரும் சீராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. பெரிய வீரர்கள் பெரிய செயல்பாடுகள் கொடுத்தால் மட்டுமே அந்த அணியால் வெற்றி என்ற ஒன்றை நினைத்துப் பார்க்க முடியும்.

அரையிறுதி வாய்ப்புக்கு இந்த வெற்றி முக்கியம்!

பாகிஸ்தான் அணியோ இந்த உலகக் கோப்பையில் இன்னும் நீடிக்க முடியும். ஆனால் அதற்கான சரியான மனநிலையில் அந்த அணி இருக்கிறதா என்று தெரியவில்லை. கிரிக்கெட் போர்டின் அறிக்கை, பாபர் ஆசமின் தனிப்பட்ட உரையாடல்கள் வெளியானது, தேர்வுக் குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் பதவியிலிருந்து விலகியது என பல சம்பவங்கள் அந்த அணியின் அமைதியைக் குலைத்திருக்கின்றன.

மஹ்மதுல்லா

இதிலிருந்து மீண்டு வந்து அந்த அணி நல்லதொரு வெற்றியைப் பெறவேண்டும். இதற்கு மத்தியில் ஷதாப் கான் காயமடைந்திருக்கிறார். இமாம் உல் ஹக், இஃப்திகர் அஹமது போன்ற சீனியர் பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடத் தவறுகிறார்கள். முதலிரு போட்டிகளுக்குப் பிறகு முகமது ரிஸ்வானும் தடுமாறத் தொடங்கிவிட்டார். இவையெல்லாம் சரியானல்தான் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு பாகிஸ்தானால் நெருக்கடி கொடுக்க முடியும்.

கவனிக்கவேண்டிய வீரர்கள்

வங்கதேசம் - ஷகிப் அல் ஹசன்:

மிகமுக்கியமான தருணத்தில் அந்த அணி வெற்றி பெற வேண்டுமெனில் அவர்களின் மிகச் சிறந்த வீரர் மிகப் பெரிய பெர்ஃபாமன்ஸை கொடுக்கவேண்டும்.

ஷொரிஃபுல் இஸ்லாம்

பாகிஸ்தான் - பாபர் ஆசம்:

கடைசி 4 போட்டிகளில் 3 அரைசதங்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம். தங்கள் அணியைச் சுற்றியுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் அவர் தன் இன்னிங்ஸ் மூலம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.