ஷார்ஜாவில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை நியூசிலாந்து அணி 8 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்ட நிலையில் நியூசிலாந்து பந்து வீச்சாளர் சுசி பேட்ஸ் (SUZIE BATES) சாதுர்யமாக பந்துவீசி 7 ரன்களை மட்டுமே விட்டுத்தந்தார்.
முன்னதாக, முதல் அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு தென்னாப்ரிக்கா அதிர்ச்சி தோல்வியை அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்காவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.
இரு அணிகளுமே இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்ரிக்கா கடந்தாண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருந்தது.