shami web
கிரிக்கெட்

“கவலைப்பட வேண்டியது ஆஸ்திரேலியாதான்..”! ஆஸியை எச்சரித்த முகமது ஷமி!

Rishan Vengai

நம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடவிருக்கிறது. ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற கடந்த இரண்டு பார்டர்-கவாஸ்கர் தொடரையும் இந்தியா கைப்பற்றியிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த ஆஸ்திரேலியா அணியும் இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் இருந்துவருகிறது.

ind vs aus

போட்டித்தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போதே ஒவ்வொரு ஆஸ்திரேலியா வீரர்களும் இந்தியாவை இந்தமுறை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என கருத்து தெரிவித்துவருகின்றனர்.

குறிப்பாக பாட் கம்மின்ஸ், நாதன் லயன், ஹசல்வுட் முதலிய வீரர்கள் டிராபியை வீட்டுக்கு எடுத்துவர வேண்டிய நேரம் இது, எனத் தெரிவித்திருந்தனர்.

முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்கள் அனைவரும் தொடரை 3-2 என ஆஸ்திரேலியா வெல்லும் என கணித்துவரும் நிலையில், இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கவலைப்பட வேண்டியது ஆஸ்திரேலியாதான் என்று தெரிவித்துள்ளார்.

கவலைப்பட வேண்டியது ஆஸ்திரேலியாதான்..

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி நவம்பர் 22 முதல் ஜனவரி 3 வரை ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்று விளையாடவிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வைத்து டாமினேட் செய்துவரும் இந்திய அணியை, இந்தமுறையாவது ஆஸ்திரேலியா வீழ்த்துமா என்ற எதிர்ப்பார்ப்பு ஆஸ்திரேலியா ரசிகர்களிடையே அதிகமாக எழுந்துள்ளது.

shami

இந்நிலையில் மூன்றாவது முறையும் இந்தியாதான் வெற்றிபெறும் என கூறியிருக்கும் முகமது ஷமி, “மூன்றாவது முறையும் பார்டர் கவாஸ்கர் டிராபியை வெல்லப்போவது இந்தியாதான், நாங்கள்தான் விரும்பமான அணியாக இருக்கிறோம், கவலைப்பட வேண்டியது ஆஸ்திரேலியாதான்” என்று பிடிஐ உடன் ஷமி பேசியுள்ளார்.

ஷமி

அவருடைய கம்பேக் குறித்து பேசியிருக்கும் ஷமி, "நான் எவ்வளவு வலிமையாக திரும்புகிறேனோ, அதுதான் எனக்கு சிறந்தது. 100% உடற்தகுதியை எட்டாமல் வங்கதேசம், நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்று மீண்டும் காயமடைய விரும்பவில்லை.

நான் ஏற்கெனவே பந்துவீச ஆரம்பித்துவிட்டேன், ஆனால் நான் 100 சதவீதம் உடற்தகுதி பெறும் வரை எந்த வாய்ப்பையும் எடுக்க மாட்டேன். எனது உடற்தகுதியை சோதிக்க உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றாலும், நான் விளையாடுவேன்” என்று கூறியுள்ளார்.