ஷமி web
கிரிக்கெட்

’திரும்பி வந்துட்டனு சொல்லு..!’ நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு திரும்பும் ஷமி.. வெளியான முக்கிய தகவல்

Rishan Vengai

2023 ஐசிசி உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு பிறகு கணுக்காலில் காயமடைந்த முகமது ஷமி, அதற்குபிறகு எந்தவிதமான போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்துவருகிறார். கணுக்கால் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட முகமது ஷமி, தற்போது படிப்படியாக மீண்டுவந்து NCA-ல் தன் உடற்தகுதியை மீட்டுவருகிறார்.

shami

இந்தியாவிற்கு அடுத்தடுத்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான டெஸ்ட் தொடர்கள் இருப்பதால், முகமது ஷமி போன்ற ஒரு வீரரின் பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியமான விசயமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முகமது ஷமி நன்றாக முன்னேறிவருவதாகவும், நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு கம்பேக் கொடுக்கும் ஷமி..

இந்தியா அடுத்தடுத்த இரண்டு முக்கியமான டெஸ்ட் தொடர்களில் விளையாடவிருக்கிறது. வரும் அக்டோபர் 16ம் தேதி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. அதேபோல நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடவிருக்கிறது.

இந்நிலையில், முகமது ஷமி இந்த இரண்டு தொடருக்கும் கிடைப்பாரா அல்லது குறைந்த பட்சம் ஆஸ்திரேலியா தொடருக்காவது கிடைப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது நியூசிலாந்து தொடருக்கே கம்பேக் கொடுக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷமியின் கம்பேக் குறித்து பேசியிருக்கும் பிசிசிஐ அதிகாரி ஒருவர், “ஷமியின் உடற்தகுதி மிகவும் சரியான பாதையில் உள்ளது, நியூசிலாந்து டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்புவார் என்ற இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து பிசிசிஐயின் கண்காணிப்பில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார்" என்று தெரிவித்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா மேற்கோள் காட்டியுள்ளது.