உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மலைப்பகுதியில் முகமது ஷமி காரில் சென்றுள்ளார். அவருக்கு முன்னாள் சென்ற கார் திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதனை பார்த்த ஷமி மற்றும் அங்கிருந்த சிலர் சேர்த்து அந்த இளைஞரை மீட்டனர்.
நல்வாய்ப்பாக லேசான காயத்துடன் தப்பிய அவருக்கு முகமது ஷமி உள்ளிட்டோர் முதலுதவியும் அளித்தனர். இது தொடர்பான வீடியோவை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷமி, கடவுள் அந்த இளைஞருக்கு இரண்டாவது வாழ்க்கையை கொடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தால் மக்கள் மனங்களை வென்ற முகமது ஷமி, தமது இந்த செயலால் பலரின் பாராட்டை பெற்றுள்ளார்.