இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகளிலும் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை வென்று அசத்தியது.
இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று குவாலியரில் நடக்கிறது. முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஒரு வலுவான பக்கமாக சென்றுள்ளது. இளம்வீரர்களான வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மற்றும் அதிரடி வீரர் நிதிஷ்குமார் ரெட்டி இருவரும் தங்களுடைய இந்திய தொப்பியை முதல்முறையாக பெறுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்கவுள்ளார், வருண் சக்கரவர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரியான் பராக், ஹர்திக் பாண்டியா முதலிய வீரர்கள் மிடில் ஆர்டரில் விளையாடுகின்றனர். மற்றொரு வேகப்பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங் விளையாடுகிறார்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார்.
முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (wk), சூர்யகுமார் யாதவ் (c), நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்