வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜெய்டன் சீல்ஸ் cricinfo
கிரிக்கெட்

SA வீரர்களின் ஸ்டம்புகளை பறக்கவிடும் 22 வயது WI பவுலர்.. 6 விக்கெட்டுகளை அள்ளிய ஜெய்டன் சீல்ஸ்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர்களான ஷமர் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ் இருவரும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர்.

Rishan Vengai

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும், பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் இரு அணி வீரர்களும் வெற்றிக்காக போராடிய நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது.

shamar joseph

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கயானாவில் உள்ள புரொவிடன்ஸ் ஸ்டேடியத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது, முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி ஷமர் ஜோசப்பின் 5 விக்கெட்டுகள் பந்துவீச்சால் 160 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது, அதற்குபிறகு ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வியான் முல்டரின் 4 விக்கெட்டுகள் பந்துவீச்சால் 144 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

ஜெய்டன் சீல்ஸ்

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்கா அணிக்கு தன்னுடைய அபாரமான பந்துவீச்சால் பதிலடி கொடுத்த மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் பவுலரான ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 246 ரன்களுக்கு சுட்டியுள்ளார்.

6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய 22 வயது பவுலர்..

ஒருகாலத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பெயர்போன வெஸ்ட் இண்டீஸ் அணி, இடையில் பெரியளவிலான வேகப்பந்துவீச்சாளர்களை உருவாக்க முடியாமல் தடுமாறியது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சு எதிர்காலம் சிறந்த கைகளில் இருப்பதற்கு ஒரு சான்றாக, 24 வயதான ஷமர் ஜோசப் மற்றும் 22 வயதான ஜெய்டன் சீல்ஸ் இருவரும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திவருகின்றனர்.

16 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது. ஆனால் ஒருதரமான கம்பேக் கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் பவுலர் ஜெய்டன் சீல்ஸ், தொடக்கவீரர் டோனி டி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் விக்கெட்டை எடுத்துவந்து தென்னாப்பிரிக்காவின் சரிவை உறுதிப்படுத்தினார்.

பின்னர் பெடிங்காம், வெரின்னே ஸ்டம்புகளை காற்றில் பறக்கவிட்ட ஜெய்டன், மகாராஜ் மற்றும் பர்கர் இருவரையும் 0 ரன்னில் வெளியேற்றி தென்னாப்பிரிக்காவை 246 ரன்களுக்கு ஆல்அவுட் செய்தார். ஜெய்டனின் 6 விக்கெட்டுகள் ஸ்பெல்லால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 263 தேவையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.