இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் நியூசிலாந்து மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது அஹமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான இந்திய மகளிர் அணி மற்றும் சோஃபி டெவின் தலைமையிலான நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது. ஆனால் நியூசிலாந்து அணியை டி20 உலகக்கோப்பைக்கு வழிநடத்திய அமெலியா கெர் தன்னுடைய அபாரமான பந்துவீச்சால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை 227 ரன்னுக்கு சுருட்டினார்.
சரியான இடைவெளியில் இந்திய அணியை எழவே முடியாமல் விக்கெட் வேட்டை நடத்திய நியூசிலாந்து பவுலர்கள் 227 ரன்னுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இந்திய வீரர்களில் அதிகபட்சமாக ஹெசப்னிஸ் 42 ரன்கள் மற்றும் தீப்தி சர்மா 41 ரன்கள் அடித்தனர். 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் நியூசிலாந்து அணி 13 ஓவர்கள் முடிவில் 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.