indian team x page
கிரிக்கெட்

INDvsSA: திடீரென நின்ற இந்திய தேசிய கீதம்.. உடனடியாக வீரர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்! #ViralVideo

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், இந்தியாவின் தேசிய கீதம் திடீரென ஒலிபெருக்கியில் நின்றுபோனபோது, நமது வீரர்கள் அதைச் சத்தமிட்டுப் பாடி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

Prakash J

தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான் இந்திய அணி, அந்த நாட்டு அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் போட்டி தொடங்கும் முன்னதாக, போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இரு அணி வீரர்களும் வரிசையாக நின்று தங்கள் நாட்டு தேசிய கீதத்தைப் பாடி மரியாதை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று நடைபெற்ற போட்டியின்போது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் தேசிய கீதங்கள் ஒலிபரப்பப்பட்டது.

அப்போது இந்தியாவின் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டபோது ஒலிபெருக்கி பாதியில் நின்றுபோனது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி நடந்திருக்கலாம் என்பதை யூகித்த நமது இந்திய அணி வீரர்கள், அந்தச் சூழ்நிலையை சமாளித்து தேசிய கீதத்தை சத்தமாக பாடி தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களும் ஒரே நேரத்தில் தேசிய கீதத்தை சத்தமாக பாடினர். இது, நெகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்ததுடன், எல்லோரையும் கவர்ந்துள்ளது.

அதேநேரம், தேசிய கீதத்தை வீரர்கள் பாடி முடித்தவுடன் மீண்டும் ஒலிபெருக்கியில் தேசிய கீதம் ஒலிபரப்பானது. அதனால், இந்திய வீரர்கள் மீண்டும் தேசிய கீதத்தைப் பாடினர். இதுதொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

இதையும் படிக்க: IND Vs SA | உகாண்டாவின் சாதனை முறியடிப்பு.. டி20யில் புதிய சரித்திரம் படைத்த இந்திய அணி..